பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: அமிர்தகரவல்லி, மங்களநாயகி.
தல மரம்: இலுப்பை.
தீர்த்தம் : பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம்.
வழிபட்டோர்: பாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் முதலியோர்.

தல வரலாறு :

      • மக்கள் வழக்கில் இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது.
      • இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் ‘பழ மண்ணிப் படிக்கரை ‘ என்றாயிற்றென்பர்.
      • இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் – இலுப்பை; பட்டு – ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று.
      • இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம்.
      • பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.
      • தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர்; வீமன் வழிபட்டது மகதீஸ்வரர்; அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர்; நகுலன் வழிபட்டது பரமேசர்; சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது.
      • திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - முன்னவன் எங்கள்

சிறப்புகள் :

      • பிராகாரத்தில் வீமன், நகுல பூசித்த லிங்கங்களும், திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும் உள்ளனர்.
      • இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது.

அமைவிடம் இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன்கோயில் – திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைக் கடந்து, ‘பாப்பாகுடி’ என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு :- 92456 19738.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com