லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்(ஸ்லோகம் )

புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!
இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ!
துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே
அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே!
செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்!
வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே!
பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை
பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே!
கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே!
கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே!

பொதுப் பொருள்: 

புனிதமான தாமரையில் அமர்ந்தவளே! கருடவாகனன் போற்றும் தேவி! பத்மாசனத்தில் அமரப்வளே! வைஷ்ணவியாய் விளங்கி எம் அல்லல்கள் அகற்று தாயே1செல்வம் அருள்பவள், அனைத்தும் நீயாய் விளங்குபவள். பரந்தாமன் மேல் பற்று கொண்டவளே! கண்ணைன் திரு மார்பில் உறைபவளே! தங்களை வணங்குகிறேன். மகாலக்ஷ்மியைப் போற்றும் துதி இது.

தினமும் மாலை வேலைகளில் பாராயணம் செய்து வந்தால் திருமகளின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு  நம் வாழ்வில் லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com