ஸ்ரீ அமிர்தவர்ஷினி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா

செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல், ராஜீவ்காந்தி நகர், ஸ்ரீ பஞ்சசக்தி பீடத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அமிர்தவர்ஷினி அம்மன் ஆலயத்தில் 18 ம் ஆண்டு ஆடி திருவிழா ஆலய ஸ்தாபகர் சரவணன் தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது.நிகழ்ச்சியில் கோ பூஜை, கணபதி ஹோமம், ஸ்ரீமஹா பிரத்தியங்கர ஹோமம், மற்றும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்திலிருந்து 108 பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் அம்மனுக்கு பதி அலங்காரம் செய்து நிலை நிறுத்தும் பூஜை, அதேபோல் ஆலமரம் முனிஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை திரட்டி சக்தி கரகம் எடுத்து பூஜை, ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு திருதளிகை படையல் பூஜை போன்றவை நடை பெற்றது இதணைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜை, மாரியம்மன் மடிப்பிச்சை பூஜை, கூழ்வார்த்தல் கும்ப படையல் பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. மேலும் பெண்கள் திரலாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர். இதில் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள், ஊர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com