குருவின் திருவருள் கிட்டும்-ஸ்லோகம்

dhashinamoorthy Future News

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்

பொருள்:
எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும்,
குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற
சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள
ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

(இதை பிரதி தினமும் பாராயணம் செய்வதால் குரு பக்தி கைகூடும்.
குருவின் அருளைப் பெற்று, இகபர லாபங்களை அடையலாம்.)