கடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்

பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள். கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது. இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை […]

Continue Reading

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பூஜிக்கும் முறைகள்

ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட, பூஜிக்க சுத்தமான பூஜை அறை தேவை. அசைவம் எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது. பூஜைக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. ஏற்ற நட்சத்திரம் சுவாதி ஆகும். இதே போல வைகாசி மாதத்தில் வரும் நரசிம்மர் ஜெயந்தியும் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் ஆகும். தினசரியும் நரசிம்மரையும் வழிபடலாம். ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படம் வைத்து, அதற்கு பூ வைத்து, பத்தி வைத்து, நெய் விளக்கு ஏற்றி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படத்தை ‘12’ முறை வலம் வர வேண்டும். பானகம் […]

Continue Reading

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசிக் கொடை 10 நாட்கள் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இங்கு தினமும் நடக்கும் பொங்கல் மற்றும் வெடி வழிபாட்டை அடுத்து ஆண்டிற்கு 3 முறை நடக்கும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜையின்போது நள்ளிரவு […]

Continue Reading

மக்களின் துயரங்களையும், இன்னல்களையும் நீக்கி நன்மை அருளுபவர் சாய்பாபா

வலியவருக்கு வேண்டியதை தரும் வள்ளலாக வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய்பாபா. மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி. 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அங்குள்ள பழமையான மசூதிக்கு பின்னே சிறுவன் ஒருவன் தியானம் செய்தான். அவனது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸை பார்த்த கிராமத்து தலைவர் மனைவி தினமும் அந்த சிறுவனுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த கோயில் பூசாரி ஒருவர் சிறுவனை சாய் என்று அழைத்தார். அந்த […]

Continue Reading

அம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்

ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். விரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். கிழமைகளும் பலன்களும் : ஞாயிற்றுக்கிழமை : மாங்காட்டு அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். […]

Continue Reading

ஐயப்ப பக்தர்களுக்கான விரத நெறிமுறைகள்

சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அதன்படி ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் வரை விரதமிருக்க வேண்டும். விரத தொடக்க நாளில் ருத்திராட்சம் அல்லது துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். விரத நாட்களில் மாமிச உணவு, மதுபானங்கள், புகையிலை பயன்படுத்தக்கூடாது. மேலும் அநாகரிகமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். தலை முடி மற்றும் முகத்தில் வளரும் தாடி, மீசையை திருத்தம் […]

Continue Reading

சோளிங்கர் யோக நரசிம்மரை வழிபட்டால் திருஷ்டி, சூனியம் விலகி ஓடும்

சோளிங்கர் ஸ்தலத்தில் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் வழிபட்டால் துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் விலகும். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும். சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மரும், […]

Continue Reading

ஆஞ்சநேயர் சங்கு, சக்கரம் வைத்திருப்பது ஏன்?

அசுரர்களை அழிக்கவே நரசிம்மரிடம் இருந்து சங்கு சக்கரங்களை ஸ்ரீஆஞ்சநேயர் பெற்றார். அசுரர்களை அழித்த பிறகு சங்கு, சக்கரங்களை நரசிம்மரிடம் ஆஞ்சநேயர் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த சங்கு, சக்கரம் ஆஞ்சநேயரிடமே தங்கி விட்டது. இதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக சோளிங்கர் ஆலய தலைமை குருக்கள் ஸ்ரீதர் பட்டாச்சார்யா விளக்கம் அளித்தார். அதாவது வைணவர்கள் ஒருவருக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தால் அவற்றை ஒரு போதும் திரும்பி வாங்க மாட்டார்கள். அந்த அடிப்படையில் தான் ஸ்ரீஆஞ்சநேயருக்கு கொடுத்த […]

Continue Reading

நித்ய சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் வீட்டில் அல்லது கோயிலில் மாத சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி விரதம் பற்றி பண்டைய புராணங்கள் நமக்குப் பல கதைகளைக் கூறினாலும்… பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கிக் கடுந்தவம் இயற்றி வரம் பெற்ற கதையே சிறப்பாகக் கொள்ளப்படுகிறது. மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி […]

Continue Reading

கார்த்திகை மாதத்தில் நலம் தரும் விரதங்கள்

கார்த்திகை மாதம் முழுவதும் விரதமிருந்து தூய மனதுடன் இறைவனை வேண்டிக்கொண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் எல்லா பாவங்களும் விலகும். இப்படி நீராடுவதை, ‘கார்த்திகை நீராடல்’ என்பர். ஸ்ரீவாஞ்சியம் என்ற தலத்தில் உள்ள திருக்குளம் ‘குப்தகங்கை’ எனப்படுகிறது. கங்கையானவள் 999 பாகம் ரகசியமாக இந்த குப்தகங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம்தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே காசியை விட இங்குள்ள கங்கைக்கே பெருமை அதிகம் […]

Continue Reading

ஜோதி வடிவில் அருள் புரிந்த ஆஞ்சநேயர்

இந்திரதூமன் என்னும் அரசர் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோளிங்கர் காட்டுக்குள் நுழைந்தார். அவர்துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத் தொடங்கியது. மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண் முன்னே அம்மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்து விட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அகிம்சையை பின்பற்றினார். ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அகிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக […]

Continue Reading

தொட்டில் கட்டினால் கை மேல் பலன்

சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள பெரிய மலைக்கு ஏறிச் செல்லும் போது படிக்கட்டு ஓரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் தொட்டில் கட்டி தொங்க விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சில பெண்கள் தாங்கள் உடுத்தியிருக்கும் சேலை முந்தானையில் கொஞ்சம் கிழித்து, அதையே தொட்டில் போல் கட்டி தொங்க விட்டு நரசிம்மரை வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு காரணமாக உடனே புத்திரபாக்கியம் […]

Continue Reading

கனவை நனவாக்கும் நயனாதேவி

சிவபெருமானை அழைக்காது யாகம் செய்த தட்சப் பிரஜாபதி, யாகத்திற்கு வருகை தந்த தன் மகள் தாட்சாயணியை அவமதிக்கவே, தேவி அங்கேயே யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவியின் உடற்பாகங்கள் ஒவ்வொன்றும் இந்தியா முழுவதும் பல இடங்களில் விழ, அவையெல்லாம் சக்தித் தலங்களாகப் போற்றி வணங்கப்படுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் 3500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நயனாதேவி ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பார்வதி தேவியின் கண்கள் நயனங்கள் விழுந்த காரணத்தால் இங்கு தேவி நயனாதேவி என்ற […]

Continue Reading

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடங்குகிறது. புனித நீர் ஊர்வலத்தில் சங்கராச்சாரியார் பங்கேற்றார். காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம். பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள் ளது. […]

Continue Reading