அருளை அள்ளித் தரும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்

கரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கண்ணுக்கு எட்டியவரை பச்சைப் பசேல் வயல் வெளிகள். நங்கவரம் ஊரின் உள்ளே நுழைந்ததுமே கிராமத்துக்கே உரிய மண்வாசனை. நம் மனதை மயக்கும் பெரிய கிராமம். சோழநாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனின் கடைக்கண் பார்வை இந்த ஊரின் மேல் பட்டது. விளைவு ? ஊரில் மூன்று ஆலயங்களை அமைத்தான் மாமன்னன். சைவப் பெருமக்களுக்காக சுந்தரேஸ்வரர் திருக்கோவில், வைணவப் […]

Continue Reading

தங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம், மலர்கள், துளசி, வில்வம், தீர்த்தம். புற்று மண் போன்ற புனித பொருட்களே பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பக்தர்களும் இறைவனை வணங்கி வழிபட்டு இந்தப் பிரசாதங்களை பெற்று ஆலயத்திலேயே தாங்கள் தரித்துக் கொள்வதுடன் பயபக்தியோடு தத்தம் இல்லங்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு ஆலயத்தில் மட்டும் தீபாவளி நாளன்று தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி […]

Continue Reading

கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்

சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார். கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர் சோளிங்கரில் ஸ்ரீயோக நரசிம்மர் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம். சோளிங்கர் […]

Continue Reading

ஷணிக லிங்கம் வழிபடும் முறை

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம். புற்று மண் லிங்கம் – மோட்சம் தரும் ஆற்று மண் லிங்கம் – பூமி லாபம் தரும் பச்சரிசி லிங்கம் – பொன், பொருள் தரும் அன்ன லிங்கம் -அன்ன விருத்தி தரும் பசுவின் சாண லிங்கம் – நோய்கள் தீரும் வெண்ணெய் […]

Continue Reading

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் தினமும் 108 முறை பாராயணம் செய்தால் நமது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

Continue Reading

சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்

‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒரு முறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது மிகப்பெரிய அக்னி கோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் […]

Continue Reading

மாங்கல்யம் தந்துநானேன” என்பதன் பொருள் என்ன

மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்” என்ற மந்திரத்தை புரோஹிதர் மட்டும் சொல்வதை விட மணமகன் சொல்லி திருமாங்கல்யத்தை மணமகளின் கழுத்தினில் கட்டுவதே சாலச்சிறந்தது. இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக புரோஹிதர் சொல்லித் தர மணமகன் திரும்பச் சொல்லி அதன் பிறகே தாலிகட்ட வேண்டும். இதனை மந்திரம் என்று சொல்வதை விட, மணமகன் ஆகிய அந்த ஆண்பிள்ளை மணமகன், தனக்கு வாழ்க்கைத் துணைவியாக […]

Continue Reading

சாய்பாபா எதிர்பார்ப்பது உண்மையான பக்தி மட்டுமே!

ஸ்ரீசாயிநாதரை தரிசிக்கச் செல்லும் போது, மனம் கனிந்த பக்தியுடன் தான் செல்ல வேண்டும். அப்போதுதான் ஸ்ரீசாயிநாதரின் பூரண அருளாசி நமக்குப் பிரசாதமாகக் கிடைக்கப் பெறும். நேரம், காலம் என்று எதுவும் கிடையாது அவருக்கு. தன் பக்தர்கள் மனதார அவரை நினைத்தாலே போதும், அவர்களைத் தேடி ஓடிவருவார். பல சந்தர்ப்பங்களில் அவர் மறைபொருளாகவும், குறியீடாகவும் தட்சணை கேட்பதுண்டு. தன் பக்தர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் உண்மையான நம்பிக்கையுடனும், பக்தியுடனும் தன்னை அழைத்தால் ஏதோவொரு ரூபத்தில் […]

Continue Reading

சந்தோஷ வாழ்வுக்கு வழிகாட்டும் குரு

மனிதராய் பிறந்தவருக்கு வாழ்வில் சந்தோஷம் மிக அவசியம். சந்தோஷம் என்பது மனதை எப்போதும் குழப்பமில்லாமல் வைத்திருப்பது. விழிப்புடன் வைத்திருப்பது. களங்கமில்லாமல் வைத்திருப்பது. வீட்டை விட்டு வெளியுலகிற்கு வந்துவிட்டால் மனதை சலனப்படுத்தும் விஷயங்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது. இந்த விஷயங்களை சந்தித்தாலும், நுகர்ந்தாலும் மனம் அதில் ஒட்டியும், ஒட்டாதும், பாதிப்படையாதும் இருக்க வேண்டும். அப்படி, சலனத்தில் சிக்கி கொண்டாலும் நாம் நமது சந்தோஷத்தை மீ்ட்டெடுக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் ஆகும் என்றால் குருவின் துணையால் மட்டுமே அது […]

Continue Reading

ஓம் நமசிவாய ” மந்திரத்தின் பொருள்

சிவபெருமானின் பஞ்சாச்சர பிராண மந்திரத்தின் உண்மை பொருள் விளக்கம் ” ஓம் நமசிவாய ” மந்திரத்தின் பொருள் நமது இறைவழிபாடு என்பது வெறும் பிராத்தனைகளால் தொழுகை முறைகளால் உருவானது அல்ல. அண்ட சராசரங்களில் நிறைந்துள்ள ஆகர்ஷன சக்திகளோடு தொடர்பு கொண்டதாகும். எனவே இறைவனது திருப்பெயர்களும் மந்திரங்களாக அயனவெளியில் சஞ்சரிக்கின்ற அதிர்வலைகளாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பஞ்சாசரத்தில் முதலாக வருகின்ற ஓம் உலகின் மூல ஒலியான பிரணவத்தை காட்டுகிறது. சி – என்பது சிவபெருமானையும், வா – என்பது […]

Continue Reading

ஸ்ரீ லிங்காஷ்டகம் – தமிழில்

தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்ல வேண்டிய லிங்காஷ்டகத்தை (தமிழில்) அறிந்து கொள்ளலாம். அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும். நான்முகன் […]

Continue Reading

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் லிங்க வழிபாடு

கலியுகத்தில் மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்ற வரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடாகும்.சிவ ஆகமங்களில் சிவபெருமானே அன்னை பார்வதிக்கு சொன்ன, அதி உன்னத வழிபாடு தான் ‘பார்த்திப லிங்க’ வழிபாடு. “கலியுகத்தில் மணலிலே சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு. அனைத்து பேறுகளையும் கேட்கின்ற வரங்களையும் உடனே வழங்க கூடிய வழிபாடு” என பரமேஸ்வரனே அன்னை பார்வதிக்கு சொல்கிறார். இந்த வழிபாட்டை செய்து தான் அன்னை பார்வதி […]

Continue Reading

புதிய வீடு கட்டி குடியேறும் போது செய்யக்கூடாதவை

புதிய வீடு கட்டி குடியேறும் போது, செய்யக்கூடாதவை என்றும் சிலவற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது என்னவென்று அறிந்து கொள்ளலாம். எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், […]

Continue Reading

ஐயப்பன் விரதம் ஏன்?

தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு. ஒவ்வொரு இறை அவதாரமும் வடிவமும் அவற்றின் பின்னணியும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியவை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. சிலசமயங்களில் நமக்கு புரியாமல் போவதால் அவற்றின் மகிமை தெரியாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றின் காரணங்களும் அந்த வழிபாட்டு முறையின் சிறப்புகளும், அவற்றின் அவசியமும் […]

Continue Reading