தஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது

தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற உள்ள பத்ரகாளியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடியில் உள்ள விநாயகர், முத்துமாரியம்மன், முத்து முனியாண்டவர் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டும், பத்ரகாளியம்மனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டும் உள்ளது. இந்த கோவில்களில் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. காலை 10 மணிக்கு […]

Continue Reading

அம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்

புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இதுபற்றிய கர்ண பரம்பரை கதை முன்னொரு காலத்தில் வேட்டையாடவந்த சோழமன்னர் தனது பைரவர் என்றழைக்கப்படும் நாயுடன் ஊத்துக்காடு பகுதிக்கு வந்துள்ளார். வேட்டையாடி களைத்துப் போனதால் அவருக்கு தாகம் எடுத்தது. உடனே அவருடன் வந்த பைரவர் உதவியுடன் அங்குள்ள ஊற்றுநீரை அருந்தி தனது தாகத்தை தணித்துக் கொண்டார். அப்போது அக்குளத்தில் அம்மன்சிலை இருப்பதைக்கண்டு அதனை வெளியே கொண்டுவந்தார். இதற்கிடையே நாகல் நாயுடு என்பவரது கனவில் தோன்றிய மாரியம்மன் […]

Continue Reading

கரும்பை உண்ட கல் யானை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேஸ்வரர் சந்நதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. தேவியின் சக்தி பீடங்களுள் இது மந்த்ரிணீ பீடமாகத் திகழ்கிறது. பெண்கள், தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமான மன உறுதியை பெறுவதற்கும் மீனாட்சியே கதியென தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் […]

Continue Reading

ஒன்பது உணர்வுகளின் நாயகி

அம்பிகை ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரச நாயகியாகத் திகழ்கிறாள். அம்பாள் தவக்கோலத்தில் சிவனை பூஜிக்கும் போது சாந்தம் நிறைந்தவளாகத் திகழ்கிறாள். சிவநிந்தை புரியும் தீயவர்களைக் கண்டால் மனம் வெறுக்கிறாள். அசுரர்களை வதம் செய்யும் போது, வீரத்துடன் போர் புரிந்து வெற்றி கொள்கிறாள். சுடலையாண்டியாக சிவன் இடுகாட்டில் நள்ளிரவில் நடனமிடுவதைக் கண்டால், மென்மையால் பயம் கொள்கிறாள். தர்மத்தை மறந்து அதர்ம வழியில் நடக்கும் அசுரர்களிடம் இருந்து உயிர்களைக் காக்க ஆவேசத்துடன் கோபம் கொண்டு எழுகிறாள். பாற்கடலில் எழுந்த நஞ்சைக் […]

Continue Reading

வேண்டியதைப் பெற அபிராமி ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள் அபிராமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும். வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப் பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வழங்கிய அபிராமி, அடியேன் தன்னை நாடித் தேடி வந்து வருந்தாதபடி என் இருதய கமலத்தில் தானே எழுந்தருளி வந்து புகுந்து, அதுவே பழைய இருப்பிடமாக எண்ணும்படி வீற்றிருந்தாள். இனிமேல் எனக்குக் கைவராத பொருள் ஒன்றும் இல்லை. அம்பிகையைத் த்யானம் பண்ணியதால் குறைவிலா நிறைவு […]

Continue Reading

துர்மந்திர பாதிப்புகள் நீங்க பரிகாரம்

பில்லி, சூனியம், துர்மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை முறைப்படி செய்து வந்தால் தடைகள் நீங்கும். தேய்பிறை ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குள் இந்த பூஜையைத் தொடங்க வேண்டும். ஸ்ரீ காளி தேவியின் படம் வைத்து அதன் முன் ஒரு புது கருப்புத்துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் ஒரு புது அகல் விளக்கேற்றி விளக்கின் முன் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைக்கவும். கருப்பு நிறக் […]

Continue Reading

சிறுமி ரூபத்தில் வந்த தையல் நாயகி

திருச்சி அருகில் உள்ள அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது வைத்தியநாத சுவாமி கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் தையல் நாயகி, சிறுமி ரூபத்தில் வந்து விபத்தை தடுத்து நிறுத்தி பக்தனுக்கு அருள் புரிந்தாள். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ரயில்வேயில் எஞ்ஜின் டிரைவராகப் பணியாற்றி வந்த அரிய மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சகலமும் தையல் நாயகி அம்மன்தான் என வாழ்ந்து வந்தார். அந்த அம்மன் மேல் தீராத பக்தி கொண்டிருந்தார். அந்த அம்மனை தரிசிக்க வாரம் தவறாமல் […]

Continue Reading

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா 12-ந்தேதி தொடங்குகிறது

சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தமிழகத்தின் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகவும், சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. 12-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு […]

Continue Reading

கருணையுடன் கேட்டால் நிவர்த்தி செய்வாள் கெங்கையம்மன்

கஷ்டம் வரும் போது ஒவ்வொருவரும் கடவுளை தேடுவார்கள். அப்படி தேடும் கடவுள் நல்லது செய்தால் அதை விட மகிழ்ச்சி பக்தர்களுக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது. அந்த வரிசையில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல் கேட்டு விடுதலை கொடுக்கும் தாயாக ஸ்ரீதேவி பாட்டை கங்கையம்மன் உள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய தங்கச்சுரங்கத்தில் பணியாற்ற தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கவயல் வந்தனர். சுரங்கத்தில் பணியாற்றியவர்களுக்கு சுரங்க நிர்வாகம் ஆங்காங்கே குடியிருப்புகள் ஏற்படுத்தியது. மக்கள் வாழும் […]

Continue Reading

ஸ்ரீவக்ரகாளியம்மன் 108 போற்றிகள்…

புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. வக்ரகாளியம்மனுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம். ஓம் அன்னையேபோற்றி ஓம் அற்றல் போற்றி ஓம் அறமேபோற்றி ஓம் அளகேபோற்றி ஓம் அழகேபோற்றி ஓம் அவமயம்போற்றி ஓம் அவமிலாய்போற்றி ஓம் அமலைபோற்றி ஓம் அசலேபோற்றி ஓம் அகலேபோற்றி -10 ஓம் அகம்போற்றி ஓம் ஆசனம்போற்றி ஓம் ஆக்ஞைபோற்றி ஓம் ஆணைபோற்றி ஓம் ஆத்தாபோற்றி ஓம் ஆயேபோற்றி ஓம் ஆரணிபோற்றி ஓம் ஆலயம்போற்றி ஓம் ஆவலேபோற்றி ஓம் […]

Continue Reading

வழிபட்டால்…. வாழ வைக்கும்…. வக்கிர காளியம்மன்

தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது. வழிபட்டால்…. வாழ வைக்கும்…. வக்கிர காளியம்மன் “சந்திர சேகரனே அருளாயென்று தண்விசும்பில் இந்திரனும்முதலா இமையத்தவள் தொழுதிறைஞ்ச அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால் மந்தர மேருவில்லா வளைத்தான் இடம் வக்கரையே” -திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் […]

Continue Reading

பொங்கல் அன்று ஆண்டாள் கல்யாணம்

சோளிங்கர் தலத்தில் தைப்பொங்கல் திருநாளில் காலையில் பெருமாள் ஆண்டாளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். போகிப்பண்டியைன்று தான் எல்லா ஊர்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். ஆனால் இவ்வூரில் மட்டும் தைப்பொங்கல் திருநாளில் ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது விசேஷம். இது கந்தாடை பெரியப்பங்கார் உபயமாகும். இவ்வாறு திரு ஆடிப்பூரத் திருக்கல்யாணம், சங்கராந்தித் திருக்கல்யாணம், ஆழ்வார் திருவடி தொழல் ஆகிய மூன்று நாட்களிலும் தொட்டாச்சார் வம்சத்தவர்க்கு- முதல் தீர்த்தகாரர்களுக்கு இரட்டை மரியாதை நடைபெறும். பொங்கல் […]

Continue Reading

திருமண வரம் அருளும் பாவை நோன்பு

மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர். மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, […]

Continue Reading

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசிக் கொடை 10 நாட்கள் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இங்கு தினமும் நடக்கும் பொங்கல் மற்றும் வெடி வழிபாட்டை அடுத்து ஆண்டிற்கு 3 முறை நடக்கும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜையின்போது நள்ளிரவு […]

Continue Reading