குறுக்குத்துறையில் ஆவணி தேர் திருவிழா: சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவிப்பு

நெல்லை குறுக்குத்துறை ஆவணி தேர் திருவிழாவை முன்னிட்டு டவுனில் சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு ஆறுமுக பெருமானின் உருகு சட்ட சேவை நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி எழுந்தருளி டவுனுக்கு சென்றார். டவுன் […]

Continue Reading

ஆவணி மூலத்திருவிழா: சுந்தரேசுவரருக்கு வைர கிரீடம் சூடி பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் 7-ம் நாளான நேற்று சுந்தரேசுவரருக்கு வைர கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.   மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூல திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் தினமும் நிகழ்த்தப்படுகின்றன. 7-ம் நாளான நேற்று வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் காலையில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ஆவணி மூலவீதி, மேலமாசிவீதி வழியாக இன்மையிலும் […]

Continue Reading

சந்தோஷமான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம்

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை ‘ஆதி மூல கணபதி’ என்று வர்ணிக்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்கின்றோம். ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும், 3 விதமான கணங்களாகப் பிரித்து திருமண […]

Continue Reading

பிரகாசமான எதிர்காலம் அமைய கதிரவன் விரத வழிபாடு

ஆவணி மாதத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், விரதம் இருந்து சூரிய பகவானை வழிபட்டால் கண் நோயால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புராணங்கள் கூறுகின்றன. காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால் மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை, நாம் நாளும் நமஸ்கரித்து வழிபட்டால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாளும் யோகமும் வரும். ஆரோக்கியமும் […]

Continue Reading

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற திருவிளையாடல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர். மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் மீனாட்சி அம்மன், எழுந்தருளினார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. விழாவின் 3-ம் நாளான நேற்று ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் […]

Continue Reading

ஆவணி அவிட்டம்-பூணூல் சிறப்பு

  பூணூல் பிராமணர் முதலிய சில இனத்தவர் சடங்கு செய்து இடது தோள்பட்டையிலிருந்து எதிர் விலாப் பக்கம் வரையில் உடம்பைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் மூன்று புரியாக உள்ள முப்புரி நூல் விளக்கம். பூணூல் = பூண் + நூல் நூல்களை எவரும் நேரிடையாக அணிவதில்லை. துணியாக நெய்துதான் அணிவர். அப்படியில்லாமல் சமய சடங்குகளுக்காக நேரிடையாக பூணத்தக்க (அணியத்தக்க) நூல்தான் பூணூல். பயன்பாடு (பிராமணர்) ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய பார்ப்பனர் இருபிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். […]

Continue Reading