ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண ஊர்வலம் தொடங்கியது

சபரிமலையில் உள்ள ஐ யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு திரு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சபரிமலையில் கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை விழா நிறைவடைந்தது. அடுத்து மகர விளக்கு பூஜைக்கான விழா தொடங்கியது. வருகிற 14-ந்தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். சபரிமலையில் […]

Continue Reading

சபரிமலை கோவிலில் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை: நாளை நடை திறக்கப்படுகிறது

மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை […]

Continue Reading

சபரிமலையில் மண்டல பூஜை: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜையின் போது பக்தர்களுக்கு தந்திரி கண்டரரூ ராஜீவரு பிரசாதம் வழங்கிய போது எடுத்த படம். உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள், நெய் அபிஷேகம் நடந்து வந்தது. மண்டல பூஜை நடைபெறும் போது ஐயப்பனுக்கு தங்க […]

Continue Reading

ராமன் வழிபட்ட சாஸ்தாம்கோட்டை ஐயப்பன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். கோவில் தோற்றம் ராவணனைப் போரில் கொன்று, சீதையை மீட்டுத் திரும்பிய ராமர், தனக்குப் போரில் கிடைத்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபட்ட தருமசாஸ்தா எனும் ஐயப்பன் கோவில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் தருமசாஸ்தாவான ஐயப்பன், மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகன் ஆகியோருடன் இணைந்து கோவில் […]

Continue Reading

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி வரை படி பூஜைகளும், 26-ந்தேதி ஐயப்பன் வெள்ளிரத ஊர்வலமும் நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம் நடக்கிறது. சபரிமலை பிரதான தந்திரி டி.கே.எம்.எம்.மகேஷ்மோகளு குழுவினரால் பிரம்மோற்சவ பூஜைகள் நடைபெற உள்ளன. 27-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கொடி இறக்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 1-ந்தேதி மாலை 6 மணிக்கு 18-ம்படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

Continue Reading

ஐயப்ப பக்தர்களுக்கான விரத நெறிமுறைகள்

சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அதன்படி ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் வரை விரதமிருக்க வேண்டும். விரத தொடக்க நாளில் ருத்திராட்சம் அல்லது துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். விரத நாட்களில் மாமிச உணவு, மதுபானங்கள், புகையிலை பயன்படுத்தக்கூடாது. மேலும் அநாகரிகமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். தலை முடி மற்றும் முகத்தில் வளரும் தாடி, மீசையை திருத்தம் […]

Continue Reading

ஐயப்பன் விரதம் ஏன்?

தண்டனையை நாமே தேடி அனுபவித்து, மனதார நம் கர்மங்களுக்கான எதிர் வினையை நாமே அனுபவித்து, விடுதலையும், ஞானமும், ஒழுக்கமாக வாழ வழிகாட்டலும் பெற்று வாழ சிறந்த மார்க்கமே ஐயப்பன் விரத வழிபாடு. ஒவ்வொரு இறை அவதாரமும் வடிவமும் அவற்றின் பின்னணியும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியவை. எல்லாவற்றிற்கும் காரண காரியம் உண்டு. சிலசமயங்களில் நமக்கு புரியாமல் போவதால் அவற்றின் மகிமை தெரியாமல் போவது ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றின் காரணங்களும் அந்த வழிபாட்டு முறையின் சிறப்புகளும், அவற்றின் அவசியமும் […]

Continue Reading

தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம்

ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை இருவேளையிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பனின் 108 சரணத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும். தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம் ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் […]

Continue Reading

திருமணத் தடை நீக்கும் ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம். தல வரலாறு : பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய […]

Continue Reading

ஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய 18 வழிபாடுகள்

சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் போது 18 வழிபாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய 18 வழிபாடுகள் 1. பதினெட்டு படி நெருங்கியதும், படிக்கு வலதுபுறம் சுவரில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உடன் நமது மனதில் ஐயனிடம் பிரார்த்திப்பதை மனதில் வேண்டிக்கொண்டு 18 படிகளையும் தொட்டு வணங்கிக்கொண்டே 18 படி ஏற வேண்டும். 2. தீபஸ்தம்பம் (கொடிமரத்தை) வணங்கி பின் […]

Continue Reading

குழந்தை வடிவில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் ஐயப்பன் குழந்தைத் தோற்றத்தில் இருக்கிறார். இங்கிருக்கும் ஐயப்பனை ‘பால சாஸ்தா’ என்றும், ‘குளத்துப்புழா பாலகன்’ என்றும் போற்றுகின்றனர். தல வரலாறு : கொட்டாரக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியாளர்கள் சிலருடன் ராமேஸ்வரத்திற்குப் புனிதப் பயணம் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். காட்டின் வழியாக வந்து கொண்டிருந்த அவர், வழியில் இருந்த கல்லடையாற்றின் கரையில் தங்கி ஓய்வெடுத்தார். அவருடன் வந்த பணியாளர்கள், அங்கே உணவு தயாரிக்கும் […]

Continue Reading

ஐம்பருவமும்.. ஐயப்பன் கோயில்களும்..!

ஆன்மிக வாழ்க்கை அற்புதமானது. ஆண்டுக்கு ஒரு முறை மாலை அணிந்து, விரதம் இருந்து சபரி மலைக்கு பயணிக்கிற, இந்த காலங்கள் ஒவ்வொரு பக்தரின் வாழ்விலும் அற்புத அனுபவத்தை அள்ளித் தருகிறது. ஐயப்பனின் வாழ்க்கை ஓர் ஆன்மிக அழகியல் கொண்டிருக்கிறது. பொதுவாக மனித வாழ்க்கையை 5 பருவங்களாக நமது சாஸ்திரங்கள் பிரித்து சொல்கின்றன. இந்த ஐம்பெரும் பருவங்களை விளக்கும் வகையிலேயே ஐயப்பனின் அவதாரங்களும் அமைந்திருக்கின்றன. ஐயப்ப சுவாமியின் வாழ்வும் ஐந்து பருவங்களை கொண்டிருக்கிறது. அதாவது பிறந்தது முதல் 18 […]

Continue Reading

சபரிமலை ஐயப்பன்( தவக்கோலம் காரணம்)

சபரிமலையில் அருளாட்சி புரிகிற ஐயப்பனின் தவக்கோலம் அதிஅற்புதமானது. தன் அவதார காரணம் பூர்த்தி பெற்று விட்டதாகவும், அதனால் சபரிமலையில் தவமிருக்க போவதாகவும், தன்னை தரிசிக்க வேண்டும் என்றால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் ஐயப்பன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இன்றும் நாம் ஐயப்பனை அந்த தவக்கோலத்திலேயே தரிசித்து வணங்குகிறோம். இந்த கோலத்தை காணும்போது, ஐயப்பனின் இரு கால்களிலும் துண்டு கட்டி இருப்பது போன்று தெரியும். இதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. ஒருமுறை […]

Continue Reading

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் – 60

ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் – 60 ஆண்டுக்கொரு முறை ஆன்மிக உலா… சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசித்தமானது. கேரளத்தை தோற்றுவித்த பரசுராமரே ஐயப்பன் கோயிலையும் ஸ்தாபித்தார். அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, எருமேலி தர்மசாஸ்தா கோயில், பந்தளம் வலியக்கோவில் போன்றவற்றையும் பரசுராமரே ஸ்தாபித்தார். இவற்றை ‘பஞ்ச சாஸ்தா’ கோயில்கள் என்கின்றனர். இக்கோயில்களில் ஐயப்பன் குழந்தையாக, பாலகனாக, குடும்பஸ்தராக பல்வேறு உருவங்களில் காட்சியளிப்பதும் சிறப்புச் சேர்க்கிறது.ஐயப்ப பக்தர்கள் இந்த அத்தனை கோயில்களிலும் வலம் வந்து ஆன்மிக கொண்டாட்டத்தில் குளித்தெழுந்தது […]

Continue Reading