பில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்

அழிவிடை தாங்கி பைரவபுரம் கால பைரவரை வணங்கினால் முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். பில்லி சூனியம் விலகும். பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள். சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம்.கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் […]

Continue Reading

பைரவருக்கு உகந்த வழிபாட்டு குறிப்புகள்

பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் அதிக விசேஷமானவையாகக் கருதப்படுகின்றன. சந்தன காப்பு அபிஷேகம் பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் […]

Continue Reading

வெற்றி தரும் ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி

தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம். 01. ஓம் பைரவனே போற்றி 02. ஓம் பயநாசகனே போற்றி 03. ஓம் அஷ்டரூபனே போற்றி 04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி 05. ஓம் அயன்குருவே போற்றி 06. ஓம் […]

Continue Reading

அஷ்டமி திதியும், பைரவர் விரத வழிபாடும்

அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம், சுகம், பொன், பொருளையும் தருவார். காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும். ஸ்ரீ பைரவருக்கு பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமி யில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் […]

Continue Reading

அழிவிடைதாங்கி பைரவர் கோவிலில் 30-ம்தேதி கால பைரவாஷ்டமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள அழிவிடைதாங்கியில் சொர்ணகால பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 500 வருடங்கள் பழமையானது இந்த திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. […]

Continue Reading

தேய்பிறை அஷ்டமி: கடன் தீர்க்கும் ஸ்ரீகால பைரவாஷ்டகம்

அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு சிறந்தது என்றாலும், தேய்பிறை அஷ்டமி நாளே, பைரவரை வழிபட மிகவும் உகந்தது. இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம். கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில் பாராயணம் செய்ய, பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும். குறிப்பாக, துரத்தும் கடன்கள் விரைவில் அடையும். ஸ்ரீகாலபைரவாஷ்டகம் : தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம் வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம் […]

Continue Reading

தேய்பிறை அஷ்டமி – கால பைரவர் விரதம்

பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.  சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். மன்மதனின் கர்வம் […]

Continue Reading

கஷ்டங்களை போக்கும் அஷ்டமி விரதம்

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் ‘அஷ்டமி திதி விரதம்’ ஆகும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.  அஷ்டமி திதி நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது ‘அஷ்டமி திதி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி நாளில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை பெரும்பாலும் உண்டு. ஆனால், தீய செயல் செய்பவர்களுக்கே இது பொருந்தும்; நற்செயல் செய்பவர்களுக்குப் பொருந்தாது. அஷ்டமி விரதமானது பைரவருக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி […]

Continue Reading

நவபாஷாண பைரவர்

சுகந்தவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பைரவர் சிலை பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, நவபாஷாணத்தால் செய்ததாக கூறப்படுகிறது.  சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ளது சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் இருக்கும் பைரவர் சிறப்பு வாய்ந்தவராக போற்றப்படுகிறார். காசியில் இருந்து வந்த போகர் என்னும் சித்தர், இந்த பைரவர் சிலையை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, இந்த பைரவர் சிலையையும் நவபாஷாணத்தால் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பைரவர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் […]

Continue Reading