சந்தோஷ வாழ்வுக்கு வழிகாட்டும் குரு

மனிதராய் பிறந்தவருக்கு வாழ்வில் சந்தோஷம் மிக அவசியம். சந்தோஷம் என்பது மனதை எப்போதும் குழப்பமில்லாமல் வைத்திருப்பது. விழிப்புடன் வைத்திருப்பது. களங்கமில்லாமல் வைத்திருப்பது. வீட்டை விட்டு வெளியுலகிற்கு வந்துவிட்டால் மனதை சலனப்படுத்தும் விஷயங்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது. இந்த விஷயங்களை சந்தித்தாலும், நுகர்ந்தாலும் மனம் அதில் ஒட்டியும், ஒட்டாதும், பாதிப்படையாதும் இருக்க வேண்டும். அப்படி, சலனத்தில் சிக்கி கொண்டாலும் நாம் நமது சந்தோஷத்தை மீ்ட்டெடுக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் ஆகும் என்றால் குருவின் துணையால் மட்டுமே அது […]

Continue Reading

குருவின் திருவருள் கிட்டும்-ஸ்லோகம்

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம் வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம் நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் பொருள்: எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்! (இதை பிரதி தினமும் பாராயணம் செய்வதால் குரு பக்தி கைகூடும். குருவின் அருளைப் பெற்று, இகபர லாபங்களை அடையலாம்.)

Continue Reading

குரு பகவானுக்கு உகந்த திருத்தலங்கள்

குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார். தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற குரு பகவான் அருள்பாலிக்கும் சிறப்பு தலங்களை பார்க்கலாம். குரு பகவானுக்கு உகந்த திருத்தலங்கள் நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டுக்கான குருபெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த வாரம் நடைபெற்றது. குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல […]

Continue Reading

குரு பரிகாரத் தலங்கள் சில

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் சனகாதி முனிவர் நால்வருக்கும் அக்னி தபசு என்ற முனிவருக்கும் பிரம்மதீர்த்தத்தில் தட்சிணாமூர்த்தியின் வடிவில் ஈசன் உபதேசம் செய்த திருக்கோலத்தைக் காணலாம். கும்பகோணம்-நாச்சியார்கோயில்-பூந்தோட்டம் பாதையில் உள்ள சிவானந்தேஸ்வரர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் தட்சிணாமூர்த்தியை கோயிலின் கருவறை விமானத்தில் தரிசிக்கலாம். தஞ்சாவூர்-திருக்காட்டுப்பள்ளி- கல்லணை வழியில், கண்டியூரை அடுத்துள்ள மேலத்திருப்பூந்துருத்தியில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார்கோயில் பெருமாள் கோயிலின் விமானத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கோயிலில் இவருக்குத் […]

Continue Reading

கிரிவலத்தால் கிடைக்கும் குருப்பெயர்ச்சி நற்பலன்

தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். குருப்பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது. தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்’ என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக […]

Continue Reading

குரு பகவானுக்குரிய ஸ்லோகம்

குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.    தேவனாம்ச ரிஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!! குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு […]

Continue Reading

குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா ஆலங்குடியில் தொடக்கம்!

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குருப்பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி, அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். இதனால், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த நாளில்,  குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் சிறப்பு என்பது பலரின் நம்பிக்கை. நவகிரகத் தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயர் ஆலயம், குரு ஸ்தலமாக விளங்குகிறது. தேவாரப் பாடல் பாடப்பட்ட இந்த […]

Continue Reading

தட்சிணாமூர்த்தி அமைப்பின் சிறப்புகள்

படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள். இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சத்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் […]

Continue Reading