திருப்பதி பிரம்மோற்சவம்: ஸ்ரீதேவி-பூதேவி, மலையப்பசாமி தேரில் பவனி

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி அலங்காரத்திலும், இரவு கல்கி அவதாரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் […]

Continue Reading

திருவந்திபுரத்தில் பிரம்மோற்சவம்: தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம்

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரத்தில் தேசிகர் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம். கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் தேசிகருக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி 12 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 750-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் […]

Continue Reading

திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து மதியம் […]

Continue Reading

கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள்கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் திருமஞ்சனம், மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, கருடதுவஜப்பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ […]

Continue Reading

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் – பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். […]

Continue Reading

திருச்செந்தூர் கோவிலில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10-ம் திருநாளான நாளை  (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.   சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு […]

Continue Reading

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் […]

Continue Reading

திருச்செந்தூர் கோவில் சுவாமி-அம்பாள் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க […]

Continue Reading

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

உறியடி உற்சவத்தில் வெங்கடேச பெருமாள் வெண்ணெய் குடத்துடன் வீதி உலா வந்தபோது எடுத்தபடம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் உறியடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி தொடங்கியது. உற்சவத்தில் நேற்று வெங்கடேச பெருமாள் வெண்ணெய் குடத்துடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சாமிக்கு வெண்ணெய் வழங்கி வழிபாடு செய்தனர். வீதி உலாவை […]

Continue Reading

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியை நம்பெருமாள் கண்டருளிய காட்சி. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்று (30-ந்தேதி) வரை நடைபெற்றது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி: தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்

விழா தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் ஈச்சனாரி விநாயகர் கோவில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற […]

Continue Reading

பூப்பல்லக்கில் முருகப்பெருமான் இருப்பிடம் திரும்பினார்

மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மேளதாளம் முழங்க பூப்பல்லக்கில் தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்துக்கு திரும்பினார்.    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. இந்த விழாவில் பாண்டிய மன்னராக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்க மதுரைக்கு சென்றார். அங்கு நேற்று மாலை 5 மணி வரை சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்துக்கு […]

Continue Reading

பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நெல்லிக்குப்பத்தில் உள்ள பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனும், பெருமாளும் ஒரே கோவிலில் எழுந்தருளி இருப்பது தனி சிறப்பாகும். இந்த கோவில் கும்பாபிஷேக 9-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 25-ந்தேதி மாலையில் பிரசன்ன வெங்கடாசலபதி சாமிக்கு […]

Continue Reading

இந்த வார விசேஷங்கள் 21.8.2018 முதல் 27.8.2018 வரை

ஆகஸ்டு மாதம் 21-ம் தேதியில் இருந்த 27-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். 21-ந்தேதி (செவ்வாய்) : * திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா. * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம், தங்கப் பல்லக்கில் பவனி. * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன […]

Continue Reading