நரகாசூரன் யார்?

நரகாசூரன் யார் என்பது பற்றியும், தீபாவளிக்கும், நரகாசூரனுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்தும் விரிவாக அறிந்து கொள்ளலாம். பூமாதேவிக்கு சுசீலன் என்னும் ஒரு மகன். கெட்ட சகவாசத்தால் கெட்டவனாகி உலகத்தைத் துன்புறுத்தினான். தவம் செய்து பிரம்மாவிடம் மரணமற்ற தன்மையைக் கேட்டு பிரம்மா அதைத்தர மறுத்ததால், வாயுவாலும் பிருத்திவீயாலும் தனக்கு மரணம் கூடாது என்னும் வரனைப் பெற்றான். நரகத்துக்கு காரணமான ஏராளமான அதர்மச் செயல்களை அவன் செய்து வந்ததால் நரகாசூரன் என்றே அவன் அழைக்கப்பட்டான். ஒரு சிலர் அவன் […]

Continue Reading

தீபாவளியின் உண்மைப் பொருள்

தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இருளைப் போக்கி ஒளியை வரவழைத்து இறைவனை வழிபடுவது என்பது தீபாவளியின் ஆழ்ந்த அர்த்தமாகும். ‘ஆவளி’ என்பதற்கு வரிசை என்பது பொருள். தீப+ஆவளி= தீபாவளி. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து, புலரும் காலத்தில் வரும் சதுர்த்தசி தினம் தீபாவளியாகும். நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த தினம் என்பதால், இதனை ‘நரக சதுர்த்தசி’ என்றும் அழைப்பார்கள். பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஞான பிரகாசத்தை, ஞான ஒளியை அடைய வேண்டும் […]

Continue Reading

மாறுபட்ட வகையில் கொண்டாடப்படும் தீபாவளி

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என பிரத்யேகமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. மாறுபட்ட வகையில் கொண்டாடப்படும் தீபாவளி தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. பிராந்திய, இன, மொழி வேறுபாடுகள் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என பிரத்யேகமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. அதுபோல் இந்து மதத்தினர் தவிர பிற மதத்தினரும் தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். சீக்கிய மதம், சமணமதம், புத்தமதம் போன்றவாறு பிற மதங்களில் […]

Continue Reading

தீபாவளியின் சிறப்புகள்

கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம். 1. ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள். 2. மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள். 3. புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள். 4. சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம். 5. குருகோவிந்த்சிங் சீக்கியமத அமைப்பான ‘கல்சா’வை அமைத்த தினம். 6. […]

Continue Reading

தீபாவளியன்று வீடுகளில் தீபம் ஏற்றுவது ஏன்?

தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம். நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள். அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். […]

Continue Reading

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம். தென்தமிழகத்தின் சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதி […]

Continue Reading

திருப்பதி பிரம்மோற்சவம்: ஸ்ரீதேவி-பூதேவி, மலையப்பசாமி தேரில் பவனி

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி அலங்காரத்திலும், இரவு கல்கி அவதாரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் […]

Continue Reading

திருவந்திபுரத்தில் பிரம்மோற்சவம்: தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம்

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரத்தில் தேசிகர் தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம். கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் தேசிகருக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி 12 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 750-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் […]

Continue Reading

திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து மதியம் […]

Continue Reading

கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள்கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் திருமஞ்சனம், மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, கருடதுவஜப்பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ […]

Continue Reading

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் – பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். […]

Continue Reading

திருச்செந்தூர் கோவிலில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10-ம் திருநாளான நாளை  (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.   சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு […]

Continue Reading

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் […]

Continue Reading

திருச்செந்தூர் கோவில் சுவாமி-அம்பாள் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி அருள்பாலித்த காட்சி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 6-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க […]

Continue Reading