திருப்பரங்குன்றம், சோலைமலை கோவில்களில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலையில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நேற்று முன்தினம் ‘வேல் வாங்குதல்‘ நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் போர் படை தளபதி […]

Continue Reading

குடும்ப நலம் காப்பார் குக்கே சுப்ரமண்யர்

பெங்களூர் அருகேயுள்ள தொட்டபாலாப்பூரில் குக்கே சுப்ரமணியார்கோயில் உள்ளது. குக்கே என்றால் கூடை எனப்பொருள். கூடை நிறைய லிங்கம் கிடைத்த இடம்… காட்டி என்றால் பானை எனப்பொருள். இங்கு பாம்பு… பானை போன்ற வடிவமைப்பில் சுப்ரமணியனை தாங்கியுள்ளது. சுப்ரமணிய விக்ரகத்திலேயே பின்னால் நரசிம்மரையும் கொண்டுள்ளது தனிச் சிறப்பு… சுப்ரமணியர், நாகங்களின் தலைவர், நரசிம்மரோ காட்டு வாசிகளை கொடூரமான விலங்குகளிலிருந்து காப்பவர்… இந்த இரண்டும் எப்படி இணைந்தன! இதற்கு கூறப்படும் தகவல் இதுதான். அசுரன் தாருகனை வதம் செய்ய, சுப்ரமணியர், […]

Continue Reading

சிக்கல்களை களையும் சிக்கல் சிங்காரவேலன்

தேவர்களின் மிதமிஞ்சிய சுகங்கள் பரமேஸ்வரனின் வழிபாட்டை மறக்கச் செய்தது. தேவலோகம் தன் களையை மெல்ல இழந்தது. தேவர்களின் அகத்தில் ஒளி குன்றியதால் புறத்தில் மலர்ந்திருந்த வளங்கள் மறையத் தொடங்கியது. ஒரு வெறுமையான வரட்சி சூழ்ந்தது. சக்தியற்றநிலை எங்கும் நிலவுவதுபோல் பொலிவிழந்து காணப்பட்டது. கேட்டதை அளித்திடும் காமதேனுதான் அதற்காக முதலில் கவலைப்பட்டது. நாட்கள்பல கடந்தபோது தேவர்களின் பசி அதிகரித்தது. ஆனால், யாகத்தின் பலனாக தங்களுக்குக் கிடைக்கும் உணவை ஈர்க்கும் சக்தியற்றிருந்தனர். கடும்பஞ்சம் பெரும் இருளைப்போல தேவலோகத்தை கவ்வியது. தேவலோகம் […]

Continue Reading

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விரதம்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் […]

Continue Reading

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்

சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்து நிற்கும் பக்தர்கள். அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு […]

Continue Reading

இந்த வார விசேஷங்கள் 13.11.2018 முதல் 19.11.2018 வரை

நவம்பர் மாதம் 13-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். * கந்தசஷ்டி, சூரசம்ஹாரம். * சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா. * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் யானை வாகனத்தில் பவனி. * சிக்கல் சிங்காரவேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் தாரக சிங்கமுக அசுரர்களை சங்கரித்து, சூரபத்மனை ஆட்கொள்ளும் நிகழ்வு, இந்திர விமானத்தில் திருக்காட்சி. * வள்ளியூர் முருகப்பெருமான் காலையில் […]

Continue Reading

தம்பதியர் ஒற்றுமைக்கு திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில்

திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். மேலும் சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி […]

Continue Reading

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளியபோது எடுத்த படம். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலையில் யாகசாலை […]

Continue Reading

உணவுகளால் ஏற்படும் ஐந்து வகை தோஷம்

நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஐந்து வகையான தோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.அன்னம் என்பது நம்முடைய உயிரைத் தாங்குவது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? என்றால், ஆம்.. […]

Continue Reading

திருச்சானூர் பத்மாவதி கோவிலில் ரூ.6.75 கோடி செலவில் அன்னதான கூடம் திறப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோவிலில் அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதான கூடம் உள்ளது. இங்கு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழா காலங்களிலும், பக்தர்கள் அதிகம் வரும் நேரங்களிலும் அன்னதான கூடத்தில் கடும் கூட்டம் ஏற்படுகிறது. இதையடுத்து, 2-வது வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அருகே புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டது. பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த அன்னதான கூடத்தில் 1½ லட்சம் […]

Continue Reading

இன்று கந்த சஷ்டி விரதம் தொடங்கியது

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார். தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை […]

Continue Reading

பாபா மீதான நம்பிக்கை நிலையாக நிற்க வேண்டும்

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுவனவே. சங்கடம் வரும் போது தான் சாயியின் ஞாபகம் வருகிறது! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன! இதயத்தைத் தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே பாபா சொன்னதில்லை. பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே. இந்த ரீதியில்தான் பக்தர்களின் நம்பிக்கையை திடப்படுத்தினார். அவர் காட்டிய வழியில் […]

Continue Reading

வாழ்வில் வெற்றியடைய சூரிய வழிபாடு!

நவகிரகங்களுக்குள் சூரியனே எல்லாவற்றிற்கும் மையம் ஆகும். ஜோதிடத்தில் சூரியனை ஆத்மகாரகன் என்று அழைப்பர். தந்தை, அரசாங்க பதவி, ஆட்சி, கண்கள், தலை போன்ற முக்கிய விஷயங்களை ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் சூரியன்தான் தீர்மானிக்கிறான். சூரியன் சரியான நிலையில் இல்லையெனில் மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் சூரியனுக்கென்று அமைந்துள்ள கொளப்பாக்கம் தலத்தை தரிசிக்கும்போது அகலுகின்றன. இத்தல இறைவன் அகத்தீஸ்வரருக்கு, வாகீச மகாதேவர் என்றும் பெயர் உண்டு. இறைவி, ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் […]

Continue Reading

தீபமேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும். சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன ஸம்பதாம் மம புத்தி ப்ரகாசய தீபம் ஜோதி நமோஸ்துதே.

Continue Reading