இந்த வார விசேஷங்கள் 4.12.2018 முதல் 10.12.2018 வரை

டிசம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். பிரதோஷம். திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநாகேஸ்வரம் ஆலயத்தில் அருளும் திருநாகேஸ்வரர் புறப்பாடு கண்டருளல். சகல சிவன் கோவில்களிலும் மாலை வேளையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. சமநோக்கு […]

Continue Reading

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 14-ந்தேதி தொடங்குகிறது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த 2 திருவிழாக்களின் போதும் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும். சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் பந்தல் போடும் பணி நடைபெற்றபோது எடுத்த படம். […]

Continue Reading

திருவண்ணாமலை அஷ்டலிங்க வழிபாடுகள்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும். இந்திரலிங்கம் : திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும். கிரிவல பாதையை சுற்றி வரும்போது முதலில் இந்திரலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் தேவர்களின் தலைவன் இந்திரனால் வணங்கப்பட்டது. இந்திர […]

Continue Reading

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 8-ந் தேதி தொடங்கும் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். டிசம்பர் 17-ந் தேதி மோகினி லங்காரம், 18-ந் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. 24-ந் தேதி திருக்கைத்தல சேவை, 25-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 27-ந் […]

Continue Reading

சிவனுக்கு ஆகாத பாவங்கள்

நாம் செய்யும் பாவங்களுக்கான பலன்களை அவசியம் சிவபெருமான் நமக்கு அளிப்பார் என்று சிவப்புராணம் கூறுகிறது. அப்படி சிவனுக்குப் பிடிக்காத, அவர் சகித்துக் கொள்ளாத பாவங்கள் எவை என்று பார்க்கலாம். சிவனுக்கு ஆகாத பாவங்கள் மும்மூர்த்திகளில் சிவ பெருமான் சம்ஹார மூர்த்தியாக அறியப்படுகிறார். சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். பொதுவாகவே ஈசன் தவறுகளை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்றும், அவருக்கு கோபம் வந்தால் பிரளயம் ஏற்படும் என்றும் காலங்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.ஆனால் உண்மையில் ஈசன் […]

Continue Reading

ஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய 18 வழிபாடுகள்

சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் போது 18 வழிபாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஐயப்பன் விரதத்தின் போது சபரிமலையில் செய்ய வேண்டிய 18 வழிபாடுகள் 1. பதினெட்டு படி நெருங்கியதும், படிக்கு வலதுபுறம் சுவரில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உடன் நமது மனதில் ஐயனிடம் பிரார்த்திப்பதை மனதில் வேண்டிக்கொண்டு 18 படிகளையும் தொட்டு வணங்கிக்கொண்டே 18 படி ஏற வேண்டும். 2. தீபஸ்தம்பம் (கொடிமரத்தை) வணங்கி பின் […]

Continue Reading

மகாலட்சுமி இருப்பிடம்

மகாலட்சுமி குடியிருக்கும் பொருட்களாக சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள். அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம். உலக வாழ்வில் பொருளின்றி வாழ்வது நரகத்திற்கு ஒப்பாகும். செல்வத்தை அருளும் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வைக்காக நாம் அனைவருமே ஏங்குகிறோம். அன்னை குடியிருக்கும் பொருட்களாக சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள். அவை: மஞ்சள், பூர்ண கும்பம், குங்குமம், கோலம், வாழை, மாவிலை, சந்தனம், தோரணம், திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லிக்காய், துளசி, கோமியம், தாமரை, சங்கு, ஸ்ரீ சூர்ணம், திருமண் […]

Continue Reading

தெய்வதரிசன விதிமுறை

நம்மால் உருவகப்படுத்தி வணங்கப்படும் தெய்வங்களை, எல்லா நேரங்களும் நாம் வழிபட முடியாது. தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களில் வழிபட்டால், அந்த வழிபாடு பயனற்றதாகி விடுகிறது. மன அமைதி வேண்டியும், இந்த உலகில் நல்வாழ்வு வாழ நமக்கு மேல் இருக்கும் சக்தியை வணங்கி நல்லாசிகள் பெறவும், நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம். தவிர்க்கப்பட வேண்டிய நேரங்கள்: விழாக்காலங்களில் சுவாமி புறப்பட்டு வீதியுலா வரும்போது மூலவரை வணங்குவதை தவிர்க்கவேண்டும். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்போதும், பிரசாதம் படைக்க திரையிட்டிருக்கும் போதும் சுவாமியை வணங்குவதைத் தவிர்க்க […]

Continue Reading

ராகுகால விரத பூஜையின் வகைகள்

ஜாதகத்தில் தோஷம், பிரச்சனை இருப்பவர்கள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து குறையை தீர்த்து கொள்ளலாம். ராகுகால விரத பூஜையின் வகைகள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை, 1. திருமணத் தடையை நீக்குதல் 2. வழக்குகளில் வெற்றி பெறுதல் 3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன. 4. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் – குறைவற்ற வாழ்வைப் பெறலாம். 5. ராகுகால […]

Continue Reading

கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்

வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் புதுப்பொலிவுடன் காணப்படும் மகிஷாசுரமர்த்தினி ஓவியம். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய ஐம்பூதங்களில் இறைவன் சிவ பெருமான் நீர்த்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ் வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். 18 ஏக்கர் பரப்பளவில் உயரமான மதில் சுவர்கள், 4 திசைகளிலும் எழில்மிகு கோபுரங்கள், […]

Continue Reading

நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வாரி வழங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா தனித்துவம் வாய்ந்தது. இதையொட்டி, அம்மனுக்கு தினமும் அபிஷேக அலங்கார தீபாராதனை வெகு விமர்சையாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்து […]

Continue Reading

இந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை

நவம்பர் 27-ம் தேதியில் இருந்து டிசம்பர் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். இந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை 27-ந்தேதி (செவ்வாய்) : * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல். * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல். * சமநோக்கு நாள். 28-ந்தேதி (புதன்) : […]

Continue Reading

அழிவிடைதாங்கி பைரவர் கோவிலில் 30-ம்தேதி கால பைரவாஷ்டமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள அழிவிடைதாங்கியில் சொர்ணகால பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 500 வருடங்கள் பழமையானது இந்த திருக்கோயில். இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. […]

Continue Reading

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய […]

Continue Reading