விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் – வேலூர்

வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்பது சொல் வழக்கு. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராண சிறப்பாகும். பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகரின் மகனாகப் பிறந்து, ஆலய இறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றாராம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற […]

Continue Reading

திருவண்ணாமலை அஷ்டலிங்க வழிபாடுகள்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும். இந்திரலிங்கம் : திருவண்ணாமலை கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை பூஜித்து வந்தால் இறைவனின் அருள் பெற்று வாழ்வில் மன நிம்மதியையும், சகல சவுகரியங்களையும் பெற முடியும். கிரிவல பாதையை சுற்றி வரும்போது முதலில் இந்திரலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் தேவர்களின் தலைவன் இந்திரனால் வணங்கப்பட்டது. இந்திர […]

Continue Reading

பெருமாள் கோயிலில் பிரதோஷம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கவேள்குன்றம் என்ற இடத்தில் சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்மமூர்த்தி கம்பீரமான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார். இந்த நரசிம்மமூர்த்தி பிரதோஷ நாளில் அவதரித்தவர் என்பதால் நந்தி தேவருடன் சிவபெருமானை வழிபடும் பிரதோஷ தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நரசிம்ம பெருமாளுக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

Continue Reading

பாவம் போக்கி நன்மையருளும் மாசிலாமணீஸ்வரர் வழிபாடு

ஆவடியை அடுத்த வட திருமுல்லைவாயலில் 500 ஆண்டு பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதி வனமாக இருந்தது. அப்போது இங்கிருந்த வாணன், ஓணன் என்ற 2 அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை எதிர்த்து போர் செய்ய வந்த தொண்டைமான் என்ற அரசனை அசுரர்கள் கொல்ல முயன்றனர். இதனால் அச்சம் அடைந்த மன்னன் பட்டத்து யானை மீதேறி தப்பி சென்று கொண்டிருந்தான். அப்போது யானையின் கால் அங்கிருந்த முல்லை கொடியில் சிக்கி கொண்டது. […]

Continue Reading

இன்று மாலை திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மகாதீபம்!

இன்று மாலை திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மகாதீபம்! கொட்டும் மழையில் கோவிலில் திரளும் பக்தர்கள்! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் 10வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை தீபம் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இதையொட்டி மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை […]

Continue Reading

திருமலை நாயக்கர் கட்டிய பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயில் என்ற பெருமைக்குரியது. இக்கோயிலில் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி உள்ளார். மூலவரின் கருவறைக்கு அருகில், சுயம்பு மூர்த்தியாக ஆஞ்சநேயர் உக்கிரமாக காட்சியளிக்கிறார். அவரது உக்கிரத்தை குறைக்கும் விதமாக, எதிரில் உள்ள கல்லில் சங்கு, சக்கர வடிவில் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். கோயிலில் கொடிமரம் உள்ளது. கோயிலுக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் உள்ளது. […]

Continue Reading

திருச்செந்தூரில் அரோகரா கோஷங்கள் முழங்க சூரனை வதம் செய்தார் முருகன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. #Soorasamharam #ThiruchendurMurugan திருச்செந்தூரில் அரோகரா கோஷங்கள் முழங்க சூரனை வதம் செய்தார் முருகன் தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து திரளான […]

Continue Reading

நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில் – காஞ்சீபுரம்

பனையபுரம் அதியமான் கோவில் முகப்புத் தோற்றம் 45 அடி உயர முருகன் சிலை மரகதத்தால் ஆன பாலதண்டாயுதபாணி சிலை முத்துசுவாமி சித்தரால் எழுப்பப்பட்ட மலைக்கோவில், நடுபழனி என காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் தலம், மரகத மூலவரைக் கொண்டு விளங்கும் திருக்கோவில், மணப்பேறு, மகப்பேறு அருளும் ஆலயம், 45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில். தல வரலாறு […]

Continue Reading

தோஷம் போக்கும் கபாலீஸ்வரர் கோவில்

எளியவர்களும் அன்னதானம் செய்வித்து தங்கள் தோஷங்களையும், முன்ஜென்ம வினைகளையும் போக்கிக்கொள்ளும் வண்ணம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருத்தலத்தில் ‘பிடி அரிசி உண்டியல்’ அமைத்துள்ளார்கள். தோஷம் போக்கும் கபாலீஸ்வரர் கோவில் உயிர்கள் வாழ்வதற்கு முக்கியமாக உணவு தேவை. ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது மணிமேகலை. அதாவது, இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் உண்ணுவதற்கு உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோராகக் கருதப்படுவார்கள் என்கிறது. புராணங்கள் அனைத்திலும், தானங்களில் மிக உயர்ந்த தானமாக அன்னதானமே […]

Continue Reading

குன்றாத வளமருளும் குபேர தலங்கள்

வற்றாத செல்வ வரம் தரும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று எனில் அது மிகையில்லை. தீபாவளி என்றவுடன் ஏதோ ஒருவிதத்தில் பணம் காசு வந்து விடுகிறது என்பது நம் வாழ்வியல் நடைமுறை உண்மை. ஏழை எளியோர் கூட விமரிசையாக கொண்டாட வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆதிநாளிலிருந்தே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஒரு சமயம் தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து குபேரன் கஷ்டப்பட்டபோது ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் மீண்டும் அளித்த தினமே தீபாவளியாகும். […]

Continue Reading

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம்

தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி […]

Continue Reading

சிறப்புகள் மிகுந்த சிதம்பரம்

பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது. சிறப்புகள் மிகுந்த சிதம்பரம் * ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன. அவை:- காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்). * பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது. […]

Continue Reading

திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலை முருகன் கோவில்களில் வருகிற 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 8-ந்தேதி(வியாழக்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. […]

Continue Reading

வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 8-ந்தேதி தொடங்குகிறது

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 8-ந் தேதி (வியாழக் கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை நடை பெறுகிறது. விழாவின் முதல் நாளன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அபிஷேகமும், அதனையடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ரக்‌ஷா பந்தனமும், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலர் பச்சை […]

Continue Reading