மகா விஷ்ணுவின் முதன்மை வாகனம் கருடன்

மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர். நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது. இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை […]

Continue Reading

கருட விரத வழிபாடு

மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி திதி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும் கருட விரத வழிபாடு செய்ய ஏற்ற திதி. நட்சத்திரமாகும். கருட விரத வழிபாடு கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். மற்ற தெய்வங்களின் சிறப்பு வழிபாடு போல கருட பகவானுக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. இதை பக்தர்கள் அனைவரும் சிரத்தையோடு கடை பிடித்து ஸ்ரீ கருடபகவானின் அருளாசிக்குப் பாத்திரமாக வேண்டும். ‘கரு’ என்பதற்கு சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பவர். […]

Continue Reading

கிழமைகளும் கருட தரிசனமும் – தீரும் பிரச்சனைகளும்

வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது கருட தரிசனம் ஆகும். எந்த கிழமையில் கருட தரிசனம் என்ன பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.  ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமையில் கருட தரிசனம் செய்ய சர்வ ரோகங்களை (நோய்கள்) நிவர்த்தி செய்து தேக, மன ஆரோக்கியத்தைத் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு! பிதுர் சாபம், தோஷம், பிதுர் துரோகம், தந்தை வர்க்காதிகளின் குரோத, விரோத எண்ணங்களின் தாக்கங்கள் போன்ற தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் செய்ய நல்ல பலன் […]

Continue Reading

பித்ரு தோஷம் போக்கும் கருட சேவை

பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும்.  கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோயில்களில் பிரம்மோற்சவம் நிகழும். அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது. வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். அந்த வைபவத்தில் மற்ற சேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா? செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் […]

Continue Reading

ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது

கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும். வேத வியாச மகிரிஷி, உலக மக்களின் நன்மைக்காக, வேதங்கள் கூறும் தர்மங்களை புராண வடிவங்களாக்கி, அவற்றை பதினெட்டு பெயர்களில் படைத்து அருளி உள்ளார். அவற்றுள் பத்ம புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், வராக புராணம், கருட புராணம் ஆகிய ஆறும் சத்துவ குணம் பொருந்தியவை என்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பற்றியவை என்றும் வழங்கி வருகின்றனர். அவற்றுள்ளும் […]

Continue Reading

ஸ்ரீ கருடனது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும்

சில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.   சில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:- 1. விசாலா – மந்தஹாசமான பார்வை. 2. கல்யாணி – மான் போல் சுழலும் பார்வை. 3. தாரா – குறுக்குப் பார்வை. 4. மதுரா – அன்பையும், அருளையும் பொழியும். 5. போகவதி – தூக்கக் கலக்கமான […]

Continue Reading

கருடனை கருடாழ்வார் என்று போற்ற காரணம்

இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.  கருடனுக்குக் ‘கருடாழ்வார்’ என்ற பெயரும் உண்டு. கிருதயுகத்தில் அகோபிலத்தைக் கொடுங்கோலனாக ஆட்சி செய்து கொண்டிருந்தான், இரண்யகசிபு. அவனை அழித்துத் தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த மனிதன் மற்றும் சிங்க உருவிலான அவதாரமே நரசிம்மர் தோற்றமாகும். பிரகலாதனைக் காக்க இறைவன் நரசிம்ம மூர்த்தியாக, இரண்யகசிபுவின் அரண்மணைத் தூணில் இருந்து வெளிவந்தார். அதனால் நரசிம்மர் கருடன் […]

Continue Reading

பக்தர் தம் பாரம் சுமக்கும் கருட பகவான்

நாச்சியார் கோயில் என்று வழங்கப்பட்டதாலேயே இந்தக் கோயிலில், தினமும் தாயாருக்குதான் முதல் மரியாதை செய்விக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, எம்பெருமான் உலா வரும்போது, முதலில் தாயார் செல்ல, பின்னால் பெருமான் தொடரும் வழக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பெருமாளின் கருவறையில் திருமணக் கோலத்தில் வஞ்சுளவல்லித் தாயார் அருட்பாலிப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதே கருவறையில் பெருமானுடன் வந்த பிற நான்கு அம்சங்களும், திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மனும் காட்சி தருவது பார்க்க சிலிர்ப்பூட்டுகிறது. இத்திருத்தலத்தில் தரிசனம் தரும் சக்கரத் தாழ்வார் […]

Continue Reading

கால சர்ப்ப தோஷம் விலகும் பரிகாரம்

கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீ கருட பகவானை வழிபடுவது ஒன்றே தோஷம் விலக சிறந்த வழி என்று ஆன்றோர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு உயிரும் இம்மண்ணில் பிறக்கும் போது, வான மண்டலத்தில் அப்போது காணப்படும் கிரகங்களின் அமைப்பைப் பொருத்தும், கிரகங்களின் அதிர்வலைகள் ஒன்றை ஒன்று குறுக்கிடுவதால் உண்டாகும் எதிர்மறை அதிர்வலைகளைப் பொருத்தும் அக்கிரகங்களினால் பாதிப்பை அடைகின்றன. அதனால் அவை அவ்வுயிருக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்து விடுகிறது. இவற்றையே ஜோதிடத்தில் கிரக தோஷங்கள் என்கிறோம். […]

Continue Reading

ராசிப்படி கருட வழிபாடு

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். எந்த ராசியினர் எந்த கிழமை கருட வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.   ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும். மேஷம் – புதன், சனி ரிஷபம் – செவ்வாய், வியாழன் மிதுனம் – திங்கள், செவ்வாய், வியாழன் […]

Continue Reading

பெரிய பாவத்திலிருந்து நம்மை காக்கும் கருடன்

கருடன் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நமக்கு நேரும் பெரிய பாவத்திலிருந்து நம்மை காக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கருடனின் திருவுருவம் வேதமே வடிவானது. அவருடைய சிறகுகளில் ரிக், யஜுர், சாம வேதங்கள் அடக்கம். அவருடைய ஞானம், சக்தி, பெருமை என்னும் குணங்களை அறிந்தவர்கள் சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் என்னும் குணங்களுக்கு இருப்பிடமான சம்சாரக்கடலை கடந்து மோட்ச மடைவார்கள். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பலன்களை நாடுபவர்கள், கருடனின் […]

Continue Reading

கருட பஞ்சமி : கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும்

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர். தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். கருடனின் நித்திய  வாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அவர்க்குரிய மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர […]

Continue Reading