தோரணமலை முருகன் கோவில் – திருநெல்வேலி

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது. கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட […]

Continue Reading

சிறுமி ரூபத்தில் வந்த தையல் நாயகி

திருச்சி அருகில் உள்ள அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது வைத்தியநாத சுவாமி கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் தையல் நாயகி, சிறுமி ரூபத்தில் வந்து விபத்தை தடுத்து நிறுத்தி பக்தனுக்கு அருள் புரிந்தாள். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ரயில்வேயில் எஞ்ஜின் டிரைவராகப் பணியாற்றி வந்த அரிய மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சகலமும் தையல் நாயகி அம்மன்தான் என வாழ்ந்து வந்தார். அந்த அம்மன் மேல் தீராத பக்தி கொண்டிருந்தார். அந்த அம்மனை தரிசிக்க வாரம் தவறாமல் […]

Continue Reading

திருமணத்தடை நீங்கி மணவாழ்வு கிட்ட ராமர் கோயில் வழிபாடு

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை கோட்டை ஊராட்சியில், திருமணத்தடை நீக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ராமர் கோயில் உள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை கோ ட்டை ஊராட்சியில், 13ம் நூற்றாண்டு காலத்தில் விஜயநகர பேரரசின் கடைசி மன்னர் சீலப்பநாயக்கர், சென்னப்பநாயக்கர்களால் தென்கரை கோட்டை கோயில் கட்டப்பட்டது. சுமார் 40 ஏக்கரில் அமைந்துள்ள இக்கோயிலில், பழங்கால சிற்பங்களுடன், மண்ணால் ஆன மதில் சுவர்கள், பாதுகாப்பு நலன் கருதி வெளிப்பக்கமாக அகழிகள் காணப்படுகின்றன. தகடூரை […]

Continue Reading

செல்வம் அருளும் வெங்கடேசப் பெருமாள் கோவில்

சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த பத்மசாலியர் குலத்தவர்கள், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் சிறிய சன்னிதியில் மூலவர் வெங்கடேசப் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். சில காலங்கள் கழித்து, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உற்சவ சிலைகளை மூலவர் சன்னிதியில் எழுந்தருளச் செய்தனர். இதையடுத்து துவஜஸ்தம்பமும், பலிபீடமும் ஏற்படுத்தப்பட்டது. பெரிய திருவடி (கருடன்) […]

Continue Reading

அழியா புகழ்தரும் ஆவராணி ஆபரணதாரி

திருமங்கை மன்னன் எனும் திருமங்கையாழ்வார் திருவரங்கனிடம் அளவிலா பக்தி கொண்டவர். அரங்கனுக்கு திருப்பணி செய்வதைத் தவிர இவ்வுலகில் வேறென்ன வேலை எனக்கு என்று திடச்சித்தம் கொண்டிருந்தார். சொல்லாண்ணா இந்தத் தாபம் அவரைத் தூங்கவிடாது செய்தது. எல்லாமும் அவன்தானெனில் இங்கிருப்பது அனைத்தும் அவனுக்குரியதுதானே. ஏன் அவனிடமே சேர்க்கக்கூடாது என்று யோசித்தார். அதனால், திருப்பணிக்குப் பொன் வேண்டு மெனில் அதையும் எடுத்துக் கொள்வோம். ஆனால், தடுப்பார்களே; கொடுக்கத் தயங்குவார்களே. அப்போது, ‘பெருமாளுக்குரியதை நீ வைத்துள்ளாய்’ என்போம். புரியாது விழிப்பார் எனில் […]

Continue Reading

திருமணம், புத்திர தோஷம் நீக்கும் தலம்

திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மூலவரை வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும். கும்பகோணத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை என்னும் ஊரில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் காட்சியளித்து வரும் சிவபெருமானை தரிசனம் செய்தால், கண்ணில் ஏற்பட்ட நோய்கள் குணமாகிவிடும், திருமணம் வாய்ப்பு தள்ளிச் செல்கிறவர்களுக்கு, திருமணம் விரைந்து நிகழும், புத்திர பாக்கியம் அமையப்பெறாதவர்களுக்கு குழந்தைபேறு அமையும், பொருளாதார மற்றும் […]

Continue Reading

அருளை அள்ளித் தரும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்

கரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கண்ணுக்கு எட்டியவரை பச்சைப் பசேல் வயல் வெளிகள். நங்கவரம் ஊரின் உள்ளே நுழைந்ததுமே கிராமத்துக்கே உரிய மண்வாசனை. நம் மனதை மயக்கும் பெரிய கிராமம். சோழநாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனின் கடைக்கண் பார்வை இந்த ஊரின் மேல் பட்டது. விளைவு ? ஊரில் மூன்று ஆலயங்களை அமைத்தான் மாமன்னன். சைவப் பெருமக்களுக்காக சுந்தரேஸ்வரர் திருக்கோவில், வைணவப் […]

Continue Reading

நன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்

புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் தாண்டியவுடன் நயினார்மண்டபம் என்ற இடத்தில் சாலையின் வலதுபுறம் கிழக்குநோக்கி அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மன். தல வரலாறு முன்னொரு காலத்தில் கடலூர் பெருவழிச் சாலையோரம் ஒரு புற்று ஒன்று தோன்றியது. அங்கு வழிப்போக்கனாக வந்த பித்தன் ஒருவன் புற்று அருகில் உள்ள மரத்தடியில் தங்கி புற்றை வழிபட்டு வந்துள்ளான். ஒருநாள் மழை பெய்தபோது புற்றின் ஒரு பகுதி கரைந்து உள்ளிருந்து பிள்ளையார் சிலை ஒன்று வெளிப்பட்டதாம். இதனால் மெய்சிலிர்த்துப்போன பித்தன் […]

Continue Reading

வழித்துணையாய் வருவார் அழிக்கால் ஆதிசிவன்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ளது ஐங்காமம். இங்குள்ள சிற்றூர் குந்நம் விளாகம். இங்கு தான் அடியவர்க்கு அற்புத வாழ்வளிக்கும் அழிக்கால் ஆதிசிவன் கோயில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்தபோது மார்த்தாண்ட மகாராஜா, நூற்றி எட்டு அந்தணர்களை கொண்டு பூஜைகள், யாகங்கள் செய்து ஐங்காமம் பகுதியில் சிவ ஆலயத்தை எழுப்பி பூஜை செய்து வந்தார். அத்தகைய சிறப்பு மிக்க சிவ ஆலயம் இவ்வூரில் அமைந்திருந்த போதும் அப்பகுதியிலுள்ள பெரும்பான்மை மக்கள் கிராம தேவதைகள் வழிபாட்டையே மேற்கொண்டு […]

Continue Reading

திருமணத் தடை நீக்கும் ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம். தல வரலாறு : பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய […]

Continue Reading

ஆளுமை திறனை அதிகரிக்கும் அகத்தீஸ்வரர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள கிராமம் புரிசை.இங்கு அருளாட்சி புரிகிறார் அகத்தீஸ்வரர். அகத்திய மகரிஷி வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் இக்கோயில் மூலவர் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். ‘‘தென்னூர் கைம்மைத் திருச்சுழியல் திருக்கானப்பேர் பன்னூர் புக்குறையும் பரமர்க்கு இடம் பாய்நலம் என்னூர் எங்கள்பிரான் உறையும் திருத் தேவனூர் பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டுப் புரிசையே.’’சுந்தரர். இயல், இசை, நாடகக் கலைகளுக்கு என உலகப் பிரசித்தி பெற்ற ஊரே புரிசை. தெருக்கூத்திற்கு என காலங்காலமாக வாழும் கலைஞர்கள் […]

Continue Reading

அளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் ஆலயம்

அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சைப்பசேல் வயல் வெளிகள். ஊரில் நுழைந்து வெளியே வயல் வெளிகளுக்கு இடையே செல்லும் சாலையில் நடந்தால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஓர் ஆலயம் தெரியும். மிகப் பழமையான ஆலயம். இந்த ஆலயத்திற்கு தென்மேற்கே ½ கி.மீ. தொலைவில் செங்குளம் என்ற குளம் இருந்த பகுதி. அந்தப் பகுதி தற்போது திடலாகக் காட்சி தருகிறது. இந்தத் திடலில் ஒரு நந்தியும் எதிரே பீடம் இல்லாத சிவலிங்கமும் […]

Continue Reading

கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில்

கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் கல்வி மேம்பாடு அடையவும், வேலைவாய்ப்பு பெற்றிட வேண்டியும் வழிபடும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் இருக்கிறது. தல வரலாறு : காசியப முனிவர் – திதி தம்பதியருக்கு இரண்யகசிபு, இரண்யாட்சன் என்று இரு மகன்கள் பிறந்தனர். […]

Continue Reading

சென்னை-தேனாம்பேட்டை ஆலையம்மன்

முன்னர் ஒரு காலத்தில் தேனாம்பேட்டை எனப்படும் மத்திய சென்னையின் இடம் வெகு தூரத்துக்கு பரவி இருந்தது. அங்கிருந்து கடற்கரைவரை தோப்புக்களும் மரங்கள் அடர்ந்த பகுதிகளுமாக இருந்தனவாம். அப்போதெல்லாம் அங்கு ஒரு பெரிய ஏரியும் உண்டாம். மக்கள் அந்த ஏரியில்தான் சென்று குளிப்பதும் மற்றவற்றை செய்வதும் உண்டாம். அதன் ஒருபுறம் வண்ணான்கள் துணிகளைத் துவைப்பார்கள். அதனால்தான் இன்றும் அந்த பகுதியில் ஒரு இடத்தில் வண்ணான்துறை உள்ளது.  அந்த ஆலயம் பற்றிய கதை ஆலயத்தில் பெரியதாக எழுதி வைக்கப்பட்டு உள்ளது. […]

Continue Reading