லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்(ஸ்லோகம் )

புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி! இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ! துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே! செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்! வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே! பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே! கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே! கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே […]

Continue Reading

லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்

மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதிகளில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.  படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும். இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை ‘ஹரித்ரா குங்குமம்’ என்று சொல்வார்கள். குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது. படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது. […]

Continue Reading

மஹாலட்சுமி தரிசனம்

திருச்சி – ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கத்திலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் கோயிலில் பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.  கருவறையில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது இடது திருத்தொடையில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருட்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டியருள்கிறார். ராம்பாக்கம் கருவறையில் பிரதான நாயகர் லட்சுமி நாராயணப் பெருமாள் எனும் திருநாமத்தோடு கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் லட்சுமி தேவியை மடியில் அமர்த்தி, வலது […]

Continue Reading

எண்வகை செல்வமருளும் மகாலட்சுமி

அனைத்துத் துன்பங்களையும் நீக்கி எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் சிறப்பு மிக்க தலமாகக் கடவில் மகாலட்சுமி ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயம் கேரளா மாநிலம், ஆலப்புழை மாவட்டம், பள்ளிப் புரம் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பகுதியில் நெசவுத் தொழில் செய்து வந்த சில குடும்பத்தினர், வாழ்வாதாரத்தினைப் பெருக்கிக் கொள்வதற்காகக் கேரளாவிலுள்ள சேர்த்தலா அருகிலுள்ள ஒரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றனர். அங்கு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாக, அவர்கள் காஞ்சிபுரத்தில் வழிபட்டு […]

Continue Reading

பிரசாதமாக வழங்கப்படும் தங்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். பொதுவாக கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், நைவேத்தியப் பொருட்களைத் தான் வழங்குவார்கள். ஆனால் ஒரு கோவிலில் தங்கம் வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம்.. அத்தகைய பெருமைக்குரிய ஆலயம் மத்திய பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ஊரின் பெயர் ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயரைக் […]

Continue Reading

‘தைரியலட்சுமி துணையிருந்தால் இழந்ததெல்லாம் மீண்டுவரும்’- விக்ரமாதித்தன் கதை!

அஷ்ட லட்சுமிகளில் எந்த லட்சுமியின் அருள் அவசியம் தேவை என்பதை விளக்கும் கதை…  ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்று, மகா லட்சுமி எட்டு திருவடிவங்களில் எட்டு வகையான செல்வங்களை நமக்கு அருள்கிறாள் என்பது ஐதீகம். இந்த எட்டு லட்சுமிகளில் ஒருவரின் அருள் மட்டும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், மற்ற லட்சுமியரின் அருளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். மற்ற லட்சுமிகள் நம்மை விட்டு விலகினாலும், ஒரு […]

Continue Reading

கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் மகாலட்சுமி

இத்திருக்கோயில் எந்த மந்திரத்தை உச்சாடனம் செய்தாலும் பலனளிக்கும் பீடம் இதுவே. இத்தேவி மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்ததே ஒரு தத்துவ நோக்கை உள்ளடக்கியது. அஞ்ஞானமே உருவெடுத்து வந்த மகிஷாசுரனை மெஞ்ஞானமே உருவான ஞானசக்தி அழிக்கிறாள் என்பதே இதன் தத்துவ விளக்கம். தேவி மஹிஷமர்த்தினி வீரசக்தி. க்ரோதீசரின் இடப்பாக்கத்தில் அருட்பிரகாசமாய், மூன்று கண்களை உடையவளாய், நம் உயிரைக் காக்கும் ஒப்பற்ற துணையாய் இருப்பவள். பாவிகளைத் தாய் போன்று அன்பு செலுத்திக் காப்பவள். பயனற்ற என்னையும் தடுத்தாட்கொண்டு பயன் உடையவளாக்குபவள். தாமரைப் பூவில் […]

Continue Reading

காரியங்களை நிறைவேற்றும் மகாலட்சுமி ஸ்லோகம்

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை மனமுருகிப் பாட வேண்டும். நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், […]

Continue Reading

லட்சுமியை விரதம் இருந்து அழையுங்கள்

மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் நாம் எந்த அளவுக்கு விரதம் இருந்து மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.   இன்றைய உலகில் பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்று கூட சொல்வார்கள். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலைதான் இன்று உள்ளது. இந்த பணத்தை சம்பாதிக்க உடல் உழைப்பு, அறிவு உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. கடவுளின் அனுகிரகமும் வேண்டும். செல்வத்தையும், பணத்தையும் வாரி வழங்கும் இறை அம்சமாக லட்சுமிதேவி […]

Continue Reading