தீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது தோரண மலை. உலகிலேயே முதல் முதலில் அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை. அகத்தியர் தலைமையில் தேரையர் உள்பட பல சித்தர்கள் அமர்ந்து அந்த அற்புத நிகழ்வை செய்துள்ளனர். தோரணை என்றால் கம்பீரம் என்று பொருள். அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இம்மலைப்பகுதி தோரணமலை என பெயர் பெற்றது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது யானை படுத்திருப்பது போல தெரியும். தென்காசி – பாபநாசம் சாலையில் மாதாபுரத்தில் இருந்து இந்த அபூர்வ […]

Continue Reading

திருச்செந்தூரில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தபோது எடுத்த படம். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். […]

Continue Reading

முருக கடவுளின் விஸ்வரூபம்

இந்திரன் முதலிய தேவர்களுக்காக முருகப்பெருமான் பேருருவம் எடுத்தார். அந்த பேருருவத்தில் எட்டு திசைகள் இருந்தன. பதினான்கு உலகங்கள் அடங்கின. எட்டு மலைகள் தோன்றின. ஏழுகடல்கள் இருந்தன. திருமால் உள்ளிட்ட தேவர்களும் அதில் தோன்றினர். திருவடிகள் பாதாளத்தை எட்டின. திக்கின் முடிவுகள் திருத்தோள்கள் ஆயின. விண்ணில் திருமுடிகள் விளங்கின. சூரியன், சந்திரன், நெருப்பு முதலியன திருக்கண்கள் ஆயின. முடி முதல் திருவடி வரை பேருடல் காட்சி அளித்தது. வாய் மறைகளாயின, அறிவுகள் காதுகள் ஆயின. பேருருவின் திருவுள்ளம் இறைவியாருடையது. […]

Continue Reading

தோரணமலை முருகன் கோவில் – திருநெல்வேலி

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது. கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட […]

Continue Reading

திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றவர்கள்.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி இன்றுஅதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட […]

Continue Reading

தைப்பூச விழா சிறப்புகள்

எல்லா சிவன் கோவில்களிலும், அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்திலோ அல்லது அந்த தினத்தையொட்டியோ பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். எல்லா சிவன் கோவில்களிலும், அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உத்தரயாண புண்ணிய காலமாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் கருதப்படுகின்றன. வசந்த காலத்தின் தொடக்கமாக தை […]

Continue Reading

தைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள்

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் குறித்த 40 சிறப்பு தகவல்களை பார்க்கலாம். 1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார். 3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். 4.தைப்பூசத்தன்று முருகன் […]

Continue Reading

முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்! முருகன் வேறு, வேல் வேறு அல்ல! * முருகன் தோன்றிய நாள் – வைகாசி விசாகம் * அறுவரும் ஒருவர் ஆன நாள் -கார்த்திகையில் கார்த்திகை * அன்னையிடம் வேல் வாங்கிய நாள் – தைப்பூசம் * அசுரரை அழித்தாட்கொண்ட நாள் -ஐப்பசியில் சஷ்டி * வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் – பங்குனி உத்திரம் இப்படி… அன்னையிடம் […]

Continue Reading

தைப்பூச திருவிழா: பழனி கோவிலில் நாளை திருக்கல்யாணம்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுதான். இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச் சியான திருக்கல்யாணம் நாளை இரவு 7.45 மணிக்கு மேல் […]

Continue Reading

ஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம்

தைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். தைப்பூசத்தன்று […]

Continue Reading

பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான்

கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெயர் பெற்றுள்ளார். தேவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்த சூரபதுமர்களை அழிப்பதற்காக சிவபெருமானை அனைவரும் வேண்டினர். இதையடுத்து சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதனை வாயு பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்கள் 6 பேரால் வளர்க்கப்பட்டனர். இதனால் அவர் […]

Continue Reading

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 12-ந்தேதி தொடங்குகிறது

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவில், அழகர்மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா சிறப்புடையதாகும். இங்கு 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இவ்வாண்டிற்கான தைப்பூச […]

Continue Reading

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்தனர். இதனால் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின் இழுவை ரெயில் […]

Continue Reading

திருச்செந்தூர் முருகப்பெருமான்

முருகப்பெருமான் சிவந்த நிறம் கொண்டவர். அவர் வீற்றிருக்கும் தலம் என்பதால் ‘செந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. முருகனின் திருநாமமும் செந்தில் என்றானது. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகிறார்கள். திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும். திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில், விசுவரூப தரிசனம் என்னும் நிர்மால்ய பூஜையே […]

Continue Reading