நடக்காததையும் நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள், ஆனால் ஏதோ தடங்கள், இடைஞ்சல் என்று! தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய் விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான் இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது. “யஸ்ப அபவத் பக் தஜன ஆர்த்திஹந்து பித்ருத்வம் அந்யேஷூ அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருஸிம் ஹம் சரணம் பிரபத்யே”

Continue Reading

குடவரை நரசிம்மர் பெருமை

குடவரை ஸ்ரீநரசிம்மர் திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநரசிம்மர் கோவில் ஊருக்கு நடுநாயகமாக விளங்கும் குன்றின் மேல்புரத்தில் அமைந்திருக்கும் குடவரையில் அமைந்துள்ளது. ஸ்ரீநரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருக்கிறார். அருகில் பூஜிக முனிவர்களான சனக சனந்தர்களும், கவரி வீசும் சூர்ய சந்திரர்களும், அடுத்து வலது புறம் ஈஸ்வரரும், இடது புறம் […]

Continue Reading

நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

நரசிம்மர் பக்தர்களுக்கும் தன் அன்பர்களுக்கும் கண்கூடாகப் பலனைக் கொடுக்கக் கூடியவர். அதனால்தான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள். தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம் நரசிம்மர். இரணியனைக் கொல்வதற்காகச் சிங்கத் தலையும் மனித உடலும் கொண்டு தூணிலிருந்து வெளியே வந்தவர். இரணியனைக் கொல்வதற்காகவே அவதரித்ததால் கோபமே உருவான இந்த மூர்த்தி, பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பார். உக்ர நரசிம்மர், சம்கார நரசிம்மர் என்று பல மூர்த்தங்களில் இவருடைய தோற்றங்கள் உள்ளன. என்றாலும் பக்தர்கள் வணங்கிப் பரவசப்படுவது சாந்த சொரூபமாய் […]

Continue Reading

ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவில்

இந்தியாவிலேயே சிங்கிரியில் மட்டும் தான் நரசிம்மர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மற்றும் மகாலட்சுமியுடன் நின்றபடியாக காட்சியளிக்கின்றார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவில் தமிழக எல்லையான ஊத்துகோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் அடுத்த நாரயணவரம் ஸ்ரீதிருமலை கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அருகே சிங்கிரி என்ற இடத்தில் நான்கு திசைகளுக்கு மலைகளின் நடுவே அடர்ந்த மூலிகைகள் வாசம் நிறைந்த காட்டுபகுதியில் 16-ம் நூற்றாண்டில் கிருஷ்ண […]

Continue Reading

கடன் தொல்லைகள் தீரும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் விரதம்

பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கபடுகிறாள். கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது. இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை […]

Continue Reading

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பூஜிக்கும் முறைகள்

ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட, பூஜிக்க சுத்தமான பூஜை அறை தேவை. அசைவம் எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது. பூஜைக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை. ஏற்ற நட்சத்திரம் சுவாதி ஆகும். இதே போல வைகாசி மாதத்தில் வரும் நரசிம்மர் ஜெயந்தியும் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் ஆகும். தினசரியும் நரசிம்மரையும் வழிபடலாம். ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படம் வைத்து, அதற்கு பூ வைத்து, பத்தி வைத்து, நெய் விளக்கு ஏற்றி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படத்தை ‘12’ முறை வலம் வர வேண்டும். பானகம் […]

Continue Reading

சோளிங்கர் யோக நரசிம்மரை வழிபட்டால் திருஷ்டி, சூனியம் விலகி ஓடும்

சோளிங்கர் ஸ்தலத்தில் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் வழிபட்டால் துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் விலகும். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ் பெற்ற திருத்தலங்கள் 108. இவை திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் மிகவும் பிரசித்தி பெற்ற திவ்யதேசமாகும். சோளிங்கரின் பெயர் புகழுக்கு காரணம் அங்கு இரண்டு தனித்தனி மலைகளில் ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மரும், ஸ்ரீயோக ஆஞ்சநேயரும் இருப்பதுதான். பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மரும், […]

Continue Reading

தொட்டில் கட்டினால் கை மேல் பலன்

சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள பெரிய மலைக்கு ஏறிச் செல்லும் போது படிக்கட்டு ஓரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் தொட்டில் கட்டி தொங்க விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சில பெண்கள் தாங்கள் உடுத்தியிருக்கும் சேலை முந்தானையில் கொஞ்சம் கிழித்து, அதையே தொட்டில் போல் கட்டி தொங்க விட்டு நரசிம்மரை வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு காரணமாக உடனே புத்திரபாக்கியம் […]

Continue Reading

கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்

சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பார்த்து அருள்பாலிக்கிறார் என்று பக்தர்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு சோளிங்கர் நரசிம்மர் ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் அருமையான விளக்கம் அளித்தார். கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர் சோளிங்கரில் ஸ்ரீயோக நரசிம்மர் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம். சோளிங்கர் […]

Continue Reading

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்கள்

திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்று அழைத்துள்ளனர். பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்று சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்கள் பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவாயார்க்கு கோவில் போல் வண்டு வளம்கிளரும் நீர்சோலை வண்பூங் கடிகை இளங்குமரன் தன்விண்ணகர்.பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி. 61 மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத் தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து […]

Continue Reading

பெருமாள் கோயிலில் பிரதோஷம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கவேள்குன்றம் என்ற இடத்தில் சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நரசிம்மமூர்த்தி கம்பீரமான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார். இந்த நரசிம்மமூர்த்தி பிரதோஷ நாளில் அவதரித்தவர் என்பதால் நந்தி தேவருடன் சிவபெருமானை வழிபடும் பிரதோஷ தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நரசிம்ம பெருமாளுக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

Continue Reading

பாவம் போக்கும் நரசிம்மர்!

பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் பாவம் ஒழிந்து புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் ஊரில் உள்ள கோவில் தான் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்த கோவிலில் மூலவராக லட்சுமி நரசிம்மரும், அம்மனாக கனகவல்லியும் உள்ளனர். இந்தியாவிலேயே இந்த கோவிலில் தான் நரசிம்மர் சுவாமியை லட்சுமியும், லட்சுமியை நரசிம்மரும் ஆலிங்கனமும் செய்தபடி காட்சியளிக்கின்றனர். திருமணத்தடை காரியத்தடை உள்ளவர்கள் இங்கு பரிக்கல் கோவிலுக்கு வந்து தரிசித்தால் விரைவில் திருமணம் […]

Continue Reading

பாவம் போக்கி மோட்சம் தரும் நரசிம்மர்

சோளிங்கபுரத்தில் யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் மோட்சம் கிட்டும். பாவங்கள் நீங்கும். துன்பங்கள் பறந்தோடும். நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர். ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக […]

Continue Reading

தம்பதியர் ஒற்றுமைக்கு திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில்

திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். மேலும் சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி […]

Continue Reading