பழனியிலும் கிரிவலம்

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல பழனியிலும் கிரிவலம் நடைபெறுகிறது. பழனிமலை சுமார் 2 1/2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பெரும்பாலானவர்கள் கிரிவலம் செய்த பிறகே மலைக்கு சென்று தண்டாயுதபாணியை வணங்குகின்றனர். அக்னி நட்சத்திரத்தின் போது சித்திரை மாத இறுதியிலும், வைகாசி மாத தொடக்கத்திலும் 14 நாட்கள் மக்கள் இரவு, பகலாக பழனி மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இந்த 14 நாட்களும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள கடம்ப மலர்கள் தலையில் சூடி கிரிவலம் செல்வார்கள். […]

Continue Reading

சத்ரு பயம், மனக்கவலை விலக மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம், ரோகம், மனக்கவலை நீங்கும். ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்னஜனதா ஸம்ரக்ஷனே தீக்ஷிதம் த்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹரப்ரேமா ஸ்பதம் ஸாஸ்வதம்! கந்தாரம் நிஸிரக்ஷணாய கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம் ப்ரத்யக்ஷம் து கலென த்ரியம்பசுபுரா தீஸம் பஜே பூதயே!! பொதுப் பொருள்: உங்களைக் காப்பவரும், தன்னை நமஸ்கரித்த ஜன சமூகத்தை ரக்ஷிப்பதில் தீக்ஷை கொண்டவரும்,எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு, சிவன் இரண்டு பேர்களுடைய […]

Continue Reading

16 சோமவார விரதம் தரும் நன்மைகள்

16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவனுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை […]

Continue Reading

குடும்ப தோஷம் நீக்கும் பழைய ராமேசுவரம்

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இக்கோவில் ராமேசுவரம் கோவிலுக்கு முந்தைய கோவில் என்பதால் ‘பழைய ராமேசுவரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள் இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், […]

Continue Reading

திருவண்ணாமலை கோவிலில் தங்கத்தேர் சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழுது காரணமாக முடங்கிக் கிடந்த தங்கத் தேரை சீரமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவு பெற்று, தை மாதத்தில் வெள்ளோட்டம் நடைபெறும் என்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்கத் தேரை இழுத்து வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, தங்கத்தேர் பழுதடைந்தது.இதையடுத்து, இரும்பு தகரக் கொட்டகையில் (பிடாரி அம்மன் சன்னதி எதிரே) தங்க தேர் நிலை நிறுத்தப்பட்டு […]

Continue Reading

திருவண்ணாமலையில் நந்தி காலை மாற்றி அமர்ந்திருப்பதற்கான காரணம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம்… முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார். நந்தி கால் […]

Continue Reading

சாபங்களை போக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்

பிரதோஷ தினமாதன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சிவன் முன்னிலையில் கூறி வழிபட, நம்மை அறியாமல் செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சாபங்களை போக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம் இன்று சிறப்பு வாய்ந்த மார்கழி மாத பிரதோஷம். சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் பிரதோஷ காலத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல்லையும், சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்களையும் சாற்றி சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை 9 அல்லது […]

Continue Reading

திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணியகால பூஜை

திருவண்ணாமலையில் நடக்கும் உற்சவங்களில் சிறப்பு வாய்ந்தது, உத்தராயண புண்ணியகால பூஜை. இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணிய கால பூஜை வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவண்ணாமலையில் உத்தராயண புண்ணியகால பூஜை திருவண்ணாமலை தலத்தில் ஆண்டு தோறும் 7உற்சவங்கள் நடைபெறுகின்றன. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, உத்தராயண புண்ணியகால பூஜை ஆகும். இது 10 நாட்கள் நடைபெறும் விழா. மார்கழி மாதத்தின் கடைசி 9 நாட்களும் தை மாதத்தின் முதல் நாளும் இந்த 10 நாள் பூஜை நடைபெறும். […]

Continue Reading

மகிழ்ச்சியான வாழ்வு தரும் சொர்ணபுரீஸ்வரர்

செம்பனார் கோயில் கடைவீதியில் அழகுற அமைந்துள்ளது, சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம் வரவேற்கிறது. இடதுபுறம் திரும்பி நடந்து எதிரே தென்படும் படிகளைக் கடந்தால் மகா மண்டபத்தை அடையலாம். மாடக்கோயில் அமைப்பில் அமைந்த ஆலயம் இது. இறைவியாக சுகந்த குந்தாளம்பிகை அருள்கிறாள். மருவார் குழலியம்மை என்பது அன்னையின் இன்னொரு பெயர். மகாமண்டபத்தில் இறைவனின் சந்நதிக்கு முன் நந்தியும் பலி பீடமும் உள்ளன. மகாமண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் நுழைவாயிலின் இடதுபுறம் சூரிய […]

Continue Reading

அண்ணாமலையார்-உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 2018-ம் ஆண்டு முடிந்து 2019-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. திருவண்ணாமலை மாவட்டத்திலும் நள்ளிரவு 11.59-க்கு முடிந்து 12 மணி பிறந்ததும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று முழங்கி புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்தில் பலர் ஈடுபட்டனர். […]

Continue Reading

நல்லவை கைகூட காசி விஸ்வநாதர் வழிபாடு

தென்னகத்தில் சைவம் தழைத்தோங்கிய காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபடுவது வாழ்நாளின் மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. வடமாநிலத்தில் உள்ள காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவது தென்மாநிலத்தில் இருந்தவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், 500 ஆண்டுகளுக்கு முன், தென்காசியில் சிவன் கோயில் கட்டுவதற்கு மன்னன் அரிகேசரிபாராங்குசன் முடிவெடுத்து, காசிக்கு சென்று சிவலிங்கத்தை வடிவமைத்தான். பின்னர் தனது மனைவியுடன் படைகள் புடைசூழ சிவலிங்கத்தை காராம்பசு மீது ஏற்றி தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகாசியில் தங்கினார். […]

Continue Reading

தமிழ்நாட்டில் சிறப்பு மிகுந்த சிவாலயங்கள்

இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த […]

Continue Reading

பாருக்கெல்லாம் படியளக்கும் பரமேஸ்வரனின் லீலை

மதுரைக்கு ‘திருவிழா நகரம்’ என்றொரு பெயருண்டு. ஆண்டு முழுக்க மாதம் தவறாது திருவிழா காணும் மகத்தான பெருமைக்குரியதாக மீனாட்சியம்மன் கோயில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும் மதுரை புற வீதிகளில் வலம் வருகிற ‘அஷ்டமி சப்பரத் திருவிழா’ நடைபெறுகிறது. இந்த விழா, உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் படி அளப்பது இறைவனே என்பதனை உணர்த்துகிறது. ஒருமுறை உலக ஜீவராசிகளுக்கு படி அளப்பதற்காக சிவபெருமான் புறப்படுகிறார். இதையறிந்த பார்வதி தேவியார், ஈசன், […]

Continue Reading

உத்தமர்கோவிலில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதியுலா

உத்தமர் கோவிலில் சாமிகள் தனித்தனி கேடயத்தில் புறப்பட்டு கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வீதியுலா வந்து, கோவில் வெளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசன புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி காலையில் ராமர் சன்னதியில் உள்ள மண்டபத்தில் உற்சவர்களான நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் நால்வர் சிறப்பு பூ அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அலங்கார, கும்ப ஆரத்தி உள்ளிட்ட தீபாராதனை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றது. […]

Continue Reading