சுழற்சி முறையில் வரும் ஏகாதசி

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் ‘திதி’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று என்று பொருள்படும். 15 நாட்களை கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் […]

Continue Reading

ஆழ்ந்த அமைதி தரும் கீதாச்சாரம்

யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் […]

Continue Reading

பெருமைகளை வழங்கும் திருமால் விரத வழிபாடு

சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். “காக்கும் கடவுள்” என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் உண்டு. அவை: விஷ்ணு, நாராயணன், கோவிந்தன், மதுசூதனன், ஜனார்த்தனன், பத்மநாபன், ப்ரஜாபதி, வராகன், சக்ரதாரி, வாமணன், மாதவன், நரசிம்மன், திரிவிக்ரமன், ரகுநாதன், ஜலசாயினன், ஸ்ரீதரன். பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை நாம் “பெருமாள்” என்று அழைக்கின்றோம். அவருக்காக கட்டிய கோவிலைப் “பெருமாள் கோவில்” என்று […]

Continue Reading

தலைமுறை பாவம் போக்கும் ருத்ராட்சம்

எந்த யாகத்தையும் செய்யாதவனும், எந்த மந்திரத்தையும் உச்சரிக்காதவனும் கூட, ருத்ராட்சத்தை தொடுவதன் மூலமாகவே அனைத்து பாவங்களில் இருந்து விடுபட இயலும். சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு சிவலிங்கம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அதேப் போலவே சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ருத்ராட்சமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. அந்த ருத்ராட்சத்தை அணிவது பற்றியும், அதன் பயன் பற்றியும் ஸ்ரீமத் தேவி பாகவதம், சிவ மகா புராணம், பழமையான சிவாகமங்களில் கூறப்பட்டுள்ள சிலவற்றை இங்கே பார்ப்போம். எந்த யாகத்தையும் செய்யாதவனும், எந்த […]

Continue Reading

விரத தினத்தன்று இட்லி சாப்பிடலாமா?

விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற தவறான கருத்து உள்ளது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். […]

Continue Reading

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள் ஆகும். இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மதியம் 1 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளி பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தை அடைகிறார். அப்போது பொதுமக்கள் அரையர் சேவையுடன் நம்பெருமாளை தரிசிக்க முடியும். இரவு 9.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் […]

Continue Reading

திருமண தடை நீங்க, செய்ய வேண்டிய பரிகார பூஜை

ஜாதக ரீதியாக தோஷம் இருந்தால் திருமணம் தடை இருக்கும். பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமல், இதற்கான தீர்வை எளிதில் காணலாம். வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம். பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து […]

Continue Reading

சகல சவுபாக்கியங்களை தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். சகல சவுபாக்கியங்களை தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை * ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும். * ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். * ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) […]

Continue Reading

வைகுண்ட ஏகாதசி: செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்

வைகுண்ட ஏகாதசியான இன்று சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அதேபோல் சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஏகாதசி அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். எத்தனை முறை சொல்கிறோமோ அந்த அளவு பலன் கிடைக்கும். மற்றும் […]

Continue Reading

திருவல்லிக்கேணி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந்தேதி முதல் திருவிழா பகல் பத்து வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து வேணு கோபாலன், காளிங்கர் நர்த்தன், சக்கரவர்த்தி திருமகள், திருக்கோலங்களில் விழா நடந்தது. இன்று ராப்பத்து திருவிழாவின் முதல் […]

Continue Reading

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும். மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் […]

Continue Reading

இந்த வாரம் என்ன விசேஷம்?

டிசம்பர் 17, திங்கள் ஸ்ரீ குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மோகனாவதாரம். டிசம்பர் 18, செவ்வாய் வைகுண்ட ஏகாதசி. சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு விழா. ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி டிசம்பர் 19, புதன் துவாதசி. திருப்பதி நவநிதி மஹா தீர்த்தம். திருவிண்ணாழி பிரதட்சணம். நாச்சியார் கோவில் ஸ்ரீ எம் பெருமான் தெப்பத்தில் உற்சவம். டிசம்பர் 20, வியாழன் திரயோதசி. பிரதோஷம். கார்த்திகை […]

Continue Reading

கடன் பிரச்சனை விரைவில் தீர எளிய பரிகாரம்

கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். கடன் பிரச்சனை விரைவில் தீர செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம். மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த சவத்தை எப்போது இடுகாட்டுக்கு எடுத்து செல்வார்கள் தெரியுமா..? குளிகை நேரம் பார்த்துதான் சவத்தை எடுப்பார்கள்..காரணம் குளிகை நேரம் என்பது திரும்ப திரும்ப அந்த காரியம் நடக்க வைக்கும்… எனவெ அந்த வீட்டில் அடிக்கடி மரணம் நிகழாதிருக்க, குளிகை நேரம் முடிந்த பிறகுதான் சவத்தை தூக்குவார்கள்..சிலர் கடன் வாங்கும்போது […]

Continue Reading

ஐயப்ப பக்தர்களுக்கான விரத நெறிமுறைகள்

சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அதன்படி ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் வரை விரதமிருக்க வேண்டும். விரத தொடக்க நாளில் ருத்திராட்சம் அல்லது துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். விரத நாட்களில் மாமிச உணவு, மதுபானங்கள், புகையிலை பயன்படுத்தக்கூடாது. மேலும் அநாகரிகமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். தலை முடி மற்றும் முகத்தில் வளரும் தாடி, மீசையை திருத்தம் […]

Continue Reading