ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது

கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும். வேத வியாச மகிரிஷி, உலக மக்களின் நன்மைக்காக, வேதங்கள் கூறும் தர்மங்களை புராண வடிவங்களாக்கி, அவற்றை பதினெட்டு பெயர்களில் படைத்து அருளி உள்ளார். அவற்றுள் பத்ம புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், வராக புராணம், கருட புராணம் ஆகிய ஆறும் சத்துவ குணம் பொருந்தியவை என்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பற்றியவை என்றும் வழங்கி வருகின்றனர். அவற்றுள்ளும் […]

Continue Reading

வினைகள் தீர்த்தருள்வார் விநாயக கோரக்கர்

திருப்புவனம் கோட்டை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவம், ஒவ்வொரு பக்தராலும் அவரவர் மனப் பக்குவத்துக்கு ஏற்றபடி உணரப்படுகிறது. எப்படி சிவன் எங்கும் வியாபித்திருக்கிறாரோ, அதேபோல அவனருளை நேரடியாகப் பெற்ற அடியார்களும் தம் மனோபலத்தால் ஒரே சமயத்தில் பல இடங்களிலும் இருக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். சித்தர்கள் என்ற பிரிவின்கீழ் அவர்கள் வந்தாலும், இவர்களும் சிவ அம்சமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோரக்கர். சாம்பலில் பூத்த மலர் இவர். பூமியில் இவரது அவதாரம் பச்சிளம் குழந்தையாக ஏற்படவில்லை; பன்னிரண்டு […]

Continue Reading

நாடி வருவோரை காக்கும் நாடியம்மன்

பட்டுக்கோட்டை என்றவுடன் நமது நினைவுக்கு முதலில் வருவது அங்கு கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் நாடியம்மனும், பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாவில் அந்த அம்மனுக்கு அணிவிக்கப்பெறும் வரகரிசி மாலையும்தான். பெரும்பாலும் நாடிமுத்து என்ற பெயர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்தான் வைத்துக் கொள்வார்கள். அந்தப் பெயரும் இந்த அம்மன் பெயரால் ஏற்பட்டதுதான். காலங்காலமாக இந்த அம்மனுக்கு கேழ்வரகு எனும் தானியத்தினால் ஆன மாலையை, அம்மன் வீதிஉலா வருகின்ற போது பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள செட்டித் தெருவில், பெரு நிலக்கிழாரும், […]

Continue Reading

சகல நன்மைகளும் அருளும் திருக்கரம்பனூர் கோயில்

திருச்சி அடுத்த பிச்சாண்டார்கோவிலில் உத்தமர் கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான்.  வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும்  லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். உலகில் வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக படைப்புக் கடவுள் பிரம்மாவே  குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில், தென்முகமாக அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து, அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி […]

Continue Reading

2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப […]

Continue Reading

அளவற்ற செல்வம் அருளும் அங்காள பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி-முத்தியால்பேட்டை ஆன்மீக பூமி என்றழைக்கப்படும் புதுச்சேரியில் முத்தியால்பேட்டை என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். கோயிலின் பெயரால் அங்காளம்மன் நகர் என்றே இப்பகுதி அழைக்கப்படுகிறது. கோயிலில் உள்ள ராஜகோபுரம் 56 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தீர்த்தக்குளம் 70 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டதாகும். தல விருட்சமாக புங்க மரம் உள்ளது. தல வரலாறு:  தற்போது சோலை நகர் அருகில் பாப்பம்மாள் கோயில் என்று அழைக்கப்படும் இடம் 400 ஆண்டுகளுக்கு முன் […]

Continue Reading

கண்ணன் வெண்ணெய் திருடியது ஏன்?

ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணெயினைத் திருடி ஆசை தீர உண்பார்.    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை […]

Continue Reading

ஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்

 கும்பாபிஷேகம், யாகம், ஆகம பூஜைகள் என அனைத்து ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும் கலசம் வைப்பது என்பது மிக முக்கியமானதாகும். கலசமே இறைவனுடைய ரூபம். பிரபஞ்சத்தின் சகல சக்திகளையும் தனக்குள் பொதித்து வைத்து பரவவிடும் ஆற்றல் கும்பத்திற்கு உண்டு. எனவேதான் அதை கோபுரத்தின் உச்சியில் வைக்கின்றனர். அப்படிப்பட்ட ஈசனின் திருமுடி எனப்படும் கலசத்தை திருமால் பூஜித்த தலமே கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயில். பார்வதிதேவி, ஈசனின் வலப்பாகத்தை அடையும் பொருட்டு காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணமானாள். ஓரிடத்தில் வாழை இலைகளால் வாழைப் […]

Continue Reading

குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன்

காஞ்சிபுரம் – திருபாடகம்  கிருஷ்ணன் வருகிறான் என்ற தகவல் எட்டியதுமே துரியோதனனின் அரசவை பலவித உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டது. பாண்டவர்களின் தூதுவனாக, சமாதானம் பேச அவன் வருகிறான். ‘அவன் தந்திரமிக்கவன். சமாதானம் பேசிவிட்டு சாதாரணமாகப் போகக்கூடியவன் அல்ல. அவன் வருகையில் நிச்சயம் ஏதோ விஷமம் இருக்கும். பாண்டவர்களுக்கு இவன் பெரிய பலம். இவனை இந்த சந்தர்ப்பத்தில் வீழ்த்திவிட்டால், பாண்டவர்களை நிரந்தர அடிமைகளாகவே வைத்திருக்கலாம்…’ & துரியோதனனின் சிந்தனையில் துர்நாற்றம் வீசியது. வரப்போகிற கிருஷ்ணனுக்கு எந்தவகையிலும் மரியாதை தரக்கூடாது என்று […]

Continue Reading

வியத்தகு வெற்றியருளும் வேணுகோபாலன்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை பேரரசர் முதல் பாமரன்வரை சகலரும் விதவிதமாக வழிபட்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் தவழ்ந்த தருணம் முதல் துவாரகாதீசனாக தேரில் வலம் வந்ததுவரை அந்தந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கிருஷ்ணனைப் பலவாறாக வழிபட்டிருக்கிறார்கள். தாய் யசோதையின் கண்டிப்பு, தந்தை நந்தகோபரின் அன்பு, கோபியரின் காதல், அரக்கியின் வஞ்சகம், குசேலரின் நட்பு, பாண்டவர்களின் பாசம், பாரதப் போரில் கீதையான ஞான வெள்ளத்தை பாய்ச்சிய அவன் மீது பீஷ்மர் கொண்ட வியப்பு, உத்தவரின் ஞானத் தொடர்பு எல்லாமே அவரவர் கிருஷ்ணன் வழிபட்ட […]

Continue Reading

சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த கண்டோபா ஆலயம்

துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்றதுண்டு. சாவடி ஊர்வலம் நடைபெறும் போது ஆஞ்சநேயர் கோவில் எதிரில் வந்ததும் பாபா சிறிது நேரம் நின்று, கையை மேலும் கீழும் அசைத்தபடி ஏதோ மந்திரங்கள் சொல்வார். அது யாருக்கும் புரியாது. பாபா மகாசமாதி அடைந்த பிறகு இந்த ஆலயமும் புதுப்பிக்கப்பட்டது. பாபா சென்ற ஆலயம் என்பதால் பக்தர்களும் தவறாமல் சென்று […]

Continue Reading

ஆற்காடு, வாலாஜா அருகே வளம் தரும் ஷடாரண்ய ஷேத்திரங்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. மேலும் பக்தர்களின் குறைகள் நீங்கி, வாழ்வில் வளம் கொழிக்கும். தல வரலாறு:   ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண […]

Continue Reading

சோதனைகள் எல்லாம் சாதனைகள் ஆகும்

திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம் எனும் தலம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’ என்றும், ‘அகம்’ என்றால் ‘கோயில்’ என்றும் பொருள். எனவே பெரியகோயில் எனும் பொருள்படும்படி, இத்தலம் திருப்பாடகம் ஆயிற்று. கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணன் பாண்டவர்களின் தூதனாக துரியோதனன் சபைக்கு சென்றார்.அவரே பாண்டவர்களின் பெரிய பலம் என எண்ணிய துரியோதனன் அவரை அழிக்க எண்ணினான். தூதுவனாக வரும் கண்ணன் அமரும் இடத்திற்கு அடியில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகள் கொண்டு மூடி […]

Continue Reading

‘தைரியலட்சுமி துணையிருந்தால் இழந்ததெல்லாம் மீண்டுவரும்’- விக்ரமாதித்தன் கதை!

அஷ்ட லட்சுமிகளில் எந்த லட்சுமியின் அருள் அவசியம் தேவை என்பதை விளக்கும் கதை…  ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்று, மகா லட்சுமி எட்டு திருவடிவங்களில் எட்டு வகையான செல்வங்களை நமக்கு அருள்கிறாள் என்பது ஐதீகம். இந்த எட்டு லட்சுமிகளில் ஒருவரின் அருள் மட்டும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், மற்ற லட்சுமியரின் அருளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். மற்ற லட்சுமிகள் நம்மை விட்டு விலகினாலும், ஒரு […]

Continue Reading