பேரெழிலும் துடிப்பும் கொண்ட கருவாழைக்கரை காமாட்சி

கருவாழைக்கரை என்ற சிற்றூரில் காஞ்சி காமகோடி பீடாதிபதியான மகாபெரியவர் இத்தலத்திற்கு வந்தபோது இந்த மாரியம்மனே காமாட்சியாக காட்சி கொடுத்தாளாம். அது முதல் இவளை காமாட்சி என்றே அழைக்கிறார்கள். பேரெழிலும் துடிப்பும் பொங்கும் அருளும் கொண்ட அன்புருவான அன்னை.  பல வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இவளே குல தெய்வமாக விளங்குகிறாள். பிரதி தினம் மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நிகழ்த்துகின்றனர். யார் வந்தாலும் இந்நேரத்தில் மாற்றம் இல்லை. குறிசொல்லும் வழக்கம் இங்கு உள்ளது. இவளை ஆராதிக்கும் குடும்பங்கள் […]

Continue Reading

ஐந்து முக முருகன்

ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். இந்த கோயிலில் முருகப்பெருமான் ஐந்து முகத்துடனும், எட்டு கரங்களுடனும் அபூர்வமாக காணப்படுகிறார். பிரம்ம தேவரை இரும்புச் சிலையில் அடைத்த பகுதி என்பதால் இந்த இடம் இரும்பொறை என்றும் வழங்கப்படுகிறது.திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். தல வரலாறு: படைப்பின் ஆதாரமான “ஓம்’ என்ற பிரணவத்தின் பொருள் பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டார். […]

Continue Reading

சகல நன்மைகளும் அருளும் திருக்கரம்பனூர் கோயில்

திருச்சி அடுத்த பிச்சாண்டார்கோவிலில் உத்தமர் கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான்.  வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும்  லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். உலகில் வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக படைப்புக் கடவுள் பிரம்மாவே  குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில், தென்முகமாக அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து, அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி […]

Continue Reading

சந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை… உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு!

50 அடி தூரத்துக்கு அப்பால் பெண்கள்… வித்தியாசமான துறவு மேலழகர் வழிபாடு… கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சலுப்பை கிராமம். சாளுக்கியப் படைகளை சோழப் படையினர் துவம்சம் செய்ததன் நினைவாக ‘சாளுக்கிய குல நாசினி’  என்று இந்த கிராமத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயர்தான் சுருங்கி ‘சலுப்பை’ என்று ஆகிவிட்டது. இந்தச் சிற்றூரில்தான் ஸ்ரீ துறவு மேலழகர் அரூபமாகத் தவமிருந்து கொண்டிருக்கிறார். துறவு என்றால் கிணறு என்று பொருள். கிணற்றின் மீதமர்ந்து தவமிருந்த […]

Continue Reading

அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கும் சேலம் கோட்டை மாரியம்மன்

சூரிய சந்திர கிரகணங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய சந்திர கிரகண கதிர்களால் வரும் பாதிப்பிலிருந்து காக்கிறாள் என்றும் சொல்கிறார்கள். ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும். பக்தர்கள் வீட்டில் அம்மை வார்த்திருக்கும் நேரத்தில் அம்மையின் வெம்மையை குறைக்க […]

Continue Reading

கடன் தீர்க்கும் பாகலூர் கணபதி!

கடன் இல்லாத வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை. எனினும், இந்தக் காலத்தில் கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்க்கமுடியாத விஷயங்களாகிவிட்டன. அவ்வகையில், தீராத வறுமையின் காரணமாகக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் வருந்தும் அன்பர்களும், உற்றார் உறவினருக்குக் கடன் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற இயலாமல் தவிக்கும் அன்பர்களும் ஏராளம். அவர்களுடைய அந்தப் பிரச்னைகள் நீங்க அருள்பாலிக்கும் தெய்வமாகத் திகழ்கிறார், பாகலூரில் கோயில் கொண்டிருக்கும்  கடன் தீர்க்கும் கணபதி! கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. […]

Continue Reading

பெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்!

இந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், திருமணத் தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.  தர்மம் ஒடுங்கி அதர்மம் தழைக்கும் காலங்களிலெல்லாம் நான் அவதாரம் எடுத்து, அதர்மத்தை அழித்து தர்மம் தழைக்கச் செய்வேன்’ என்ற பகவான் கண்ணனின் வாக்கின்படி, திருமால் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அப்படி அவர் எடுத்த அவதாரங்கள் அதர்மத்தை அழித்து தர்மத்தை தழைக்கச் செய்வதாக மட்டுமின்றி, பரிணாம தத்துவத்தை உணர்த்தும் […]

Continue Reading

அக்டோபர் மாதம் திருப்பதியில் 8 வகையான வழிபாடுகள் ரத்து: காரணம் இதுதான்..!!

செப்டம்பரில் பிரம்மோற்சவ விழா துவங்கவுள்ளதால் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் உட்பட எட்டு வகையான வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா திருப்பதியில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. மேலும், செப்டமர் 11ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்கிற தூய்மைப் பணி, 12ம் தேதி அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்வுகளுக்கு […]

Continue Reading