நவராத்திரி பிரம்மோற்சவம் 2-வது நாள்: அம்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு அம்ச வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி பிரம்மோற்சவம் 2-வது நாள்: அம்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா […]

Continue Reading

நவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கை

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கையாக வழங்கினார். நவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் பலர் ஏழுமலையான் கோவிலுக்கு காய்கறிகள், மலர்கள், வாழை இலைகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை உள்பட பல்வேறு வகையான […]

Continue Reading

திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி இன்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்கத் திருச்சி வாகன வீதிஉலா, மாலை 6 […]

Continue Reading

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி?

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா உருவானது எப்படி? என்பதை பற்றி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன் கிழமை) நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, இரவு இரு வேளைகள் வாகன வீதிஉலா நடக்கிறது. இந்த வாகன வீதிஉலா காலையில் 9 மணிக்கு தொடங்கி 11 மணிவரையிலும், […]

Continue Reading

மலையப்பனின் முதல் தரிசனம் !

திருமலையில் ‘சுப்ரபாத சேவை’ என்று ஒரு தரிசனம் உண்டு! விடியற்காலை 02:30 மணிக்கு மலையப்பனுக்கு சுப்ரபாதம் ஆரம்பிக்கும். அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் நடையை சாத்தியிருப்பார்கள், உடனே, அடுத்த நாள் தரிசனத்துக்குப் பெருமாள் தயாராகி விடுவார்! ஒரு நாளின் இந்த முதல் தரிசனம் யாருக்குக் கிட்டும் தெரியுமா? வேதம் ஓதுபவர்களுக்கா, ஆலய பிரதான ஜீயருக்கா, மந்திரிக்கா, வி.ஐ.பிக்கா…? இல்லை! வேறு யாருக்கு? இவர்கள் எல்லாரும் கைகட்டிக் காத்திருக்க, வேறு ஒருவருக்குதான் ஏழுமலையான் முதல் தரிசனம் தருகிறார்! […]

Continue Reading

திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா 10-ந்தேதி தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி முதல் தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.   திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் உற்சவரான மலையப்பசாமி காலை, இரவு என இருவேளைகளில் திருமலையில் உள்ள 4 […]

Continue Reading

திருப்பதி பிரம்மோற்சவம்: ஸ்ரீதேவி-பூதேவி, மலையப்பசாமி தேரில் பவனி

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி அலங்காரத்திலும், இரவு கல்கி அவதாரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து 10 மணிவரை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் […]

Continue Reading

திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து மதியம் […]

Continue Reading

வெங்கடாஜலபதி தரிசனம்

செங்கல்பட்டு, பழைய சீவரத்தில், வெங்கடேசர் சங்குசக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர் கொண்டு நான்முகனாகவும் மும்மூர்த்திகளின் சங்கமமாக விளங்குகிறார். சென்னைவேலூர் வழியில் காவேரிப்பாக்கத்தில் சந்திரனின் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி, பெருமாளை நோக்கித் தவமிருந்து தன் கணவரின் சாபத்தைப் போக்கினாள். மூன்றாம் பிறையன்று திருவோண நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்ய, நினைத்தது நிறைவேறுகிறது. ஹைதராபாத்உஸ்மான் சாகர் ஏரிக்கரை, சிலுகூரிலுள்ள பெருமாள், வேண்டுவோருக்கு வெளிநாடு செல்ல விசா உடனே கிடைக்க அருள்வதால், இவர் […]

Continue Reading

திருப்பதியில் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் – 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.10-க்கு தொடங்கி 11 மணி வரை நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை வருடாந்திர பிரம்மோற்சவம் 9 நாட்கள் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி […]

Continue Reading

திருப்பதியில் பிரம்மோற்சவ ஒத்திகை கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ ஒத்திகை கருடசேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். திருப்பதியில் பிரம்மோற்சவ ஒத்திகை கருடசேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் தங்கக் கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடப்பது வழக்கம். நேற்று சிரவண பவுர்ணமியையொட்டியும், அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் 5-வது நாள் நடக்கும் கருட […]

Continue Reading

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு சதுர்தச கலச ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.   தங்கக்கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு அர்ச்சகர் ஒருவர் பாலாபிஷேகம் செய்த காட்சி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா கும்பாபிஷேகம் அன்று குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. […]

Continue Reading

திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் 16-ந்தேதி மகா கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் […]

Continue Reading