திருமண தடை நீக்கும் உச்சிஷ்ட விநாயகர் கோயில்

நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி. விநாயகருக்கு தனி கோயில் கொண்ட இங்கு மட்டுமே ராஜகோபுரம் உள்ளது. இதனால் ஆசியாவிலேயே ராஜகோபுரம் கொண்ட தனி விநாயகர் ஆலயம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில் நாயக்கர், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன. […]

Continue Reading

ஆனைமுகன் அருளும் ஆலயங்கள்

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது சிறப்பை தரும். இன்றுவித்தியாசமான வடிவில் காட்சி தரும் விநாயகர் ஆலயங்களை அறிந்து கொள்ளலாம். * மயிலாடுதுறை – கும்பகோணம் வழியில் ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடி கிராமம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் விருச்சிகப் பிள்ளையார் அருள்புரிகிறார். தேளுக்கு இருப்பது போல் வரி வரியாக கோடுகள் கொண்டவர் என்பதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் […]

Continue Reading

கடன் பிரச்சனையை தீர்க்கும் தோரண கணபதி விரத வழிபாடு

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்படுவோரும், கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் திண்டாடி வருவோருக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி தருவார் தோரண கணபதி. மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி விரத வழிபாடு கை கொடுக்கும். செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை […]

Continue Reading

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பகல் முழுவதும் நடைதிறப்பு

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஐயப்பன் மற்றும் முருகப் பக்தர்களின் வசதிக்காக பகல் முழுவதும் நடை திறந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொறு வருடமும் கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடைத்திறந்திருக்கும். […]

Continue Reading

தர்மபுரியில் அருள்பாலிக்கும் நாகதோஷம் போக்கும் சாலை விநாயகர்

தர்மபுரி-சேலம் சாலையில் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த சாலை விநாயகர் கோயில். இக்கோயில் திருவுண்ணாழி, மகாமண்டபம் ஆகியவற்றை கொண்ட சிறிய கோயிலாகும். கோயிலின் முதன்மை தெய்வமான விநாயகருக்கு இரு புறங்களிலும் நாகர் திருவுருவங்கள் உள்ளது. விநாயகர் நாற்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயிலில், திருச்சுற்றில் தென்மேற்கில் துர்க்கை, மேற்கே பாலசுப்ரமணியர், சிவலிங்கம், லட்சுமிதாயார் அருள்பாலிக்கின்றனர். விநாயகர் புராணங்களில் முமு முதற்கடவுளாக போற்றப்படுகிறார். பண்டைக்காலத்தில் மன்னர்கள், நல்லகாரியங்களை செய்யும் போதும், போருக்குச் […]

Continue Reading

பெருமைகள் வந்து சேரப் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடுவோம்

ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடவேண்டும். அப்படிப்பட்ட விநாயகருக்கு சஷ்டியும், சதயமும் கூடுகின்ற நேரத்தில் ‘பிள்ளையார் நோன்பு’ என்றுகொண்டாடுவர். எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான் மரபு. வெற்றிகளை வரவழைத்துக் கொடுக்கக் கூடியவர். மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், இருக்கும் இடத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆற்றல் மிகுதெய்வம் விநாயகர். தடைகளை அகற்றி தக்க நேரத்தில் செயல்களை […]

Continue Reading

கிரக தோஷங்களை போக்கும் நவக்கிரக விநாயகர்

திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் உள்ள நவக்கிரக விநாயகரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள். கிரக தோஷங்களை போக்கும் நவக்கிரக விநாயகர் திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊர் உள்ளது. இங்கு 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள். ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது. திருவாரூரில் ஆயிரம் […]

Continue Reading

கணபதியின் அருளைப் பெறுவதற்கான விரதங்கள்

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் கணபதியை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும். கணபதியின் அருளை பெறுவதற்காக விரதங்களை பார்க்கலாம். கணபதியின் அருளைப் பெறுவதற்கான விரதங்கள் 1. வைகாசி வளர்பிறை: முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம். 2. செவ்வாய் விரதம்: ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும். 3. சதுர்த்தி விரதம்: பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது […]

Continue Reading

நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றும் ஸ்தம்ப கணபதி

சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் எல்லோருக்கும் பிரியமான மூர்த்தியாக இந்த ஸ்தம்ப கணபதி இருக்கிறார். நியாயமான வேண்டுதல்களை தட்டாமல் நிறைவேற்றியும் இருக்கிறார். நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றும் ஸ்தம்ப கணபதி சிருங்கேரியில் ஆச்சார்யர் தங்கி இருக்கும் பிரதேசத்துக்கு நரசிம்ம வனம் என்று பேர். துங்கையின் ஒரு கரையில் சாரதாம்பா கோவில், இன்னொரு கரையில் நரசிம்ம வனம் உள்ளது. இரண்டு கரையையும் நரசிம்ம சேது என்று ஒரு பாலம் இணைக்கிறது. நரசிம்ம பாரதி சுவாமிகள் கால கட்டத்தில் பாலம் கிடையாது. அந்த […]

Continue Reading

கடன் தீர்க்கும் ஸ்ரீ தோரண கணபதி பதிவு: அக்டோபர் 31, 2018 10:32

அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும். ஸ்ரீ தோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ருணம் எனும் கடன் தீரும். சக்தி தேவியர் தனியாகக் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப்புறமாக சன்னதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச-பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் […]

Continue Reading

ஆனைமுகனை எப்படி வழிபடலாம்?

முழுமுதற்கடவுள் விநாயகர் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுபவர். விநாயகரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். ஆனைமுகனை எப்படி வழிபடலாம்? முழுமுதற்கடவுள் விநாயகர் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுபவர். விநாயகப்பெருமானை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் நம் நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும். பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும். அருகம்புல் மாலை […]

Continue Reading

அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு

இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில் அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். . அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். இதன் அடிப்படையில் […]

Continue Reading

குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் விநாயகர் வழிபாடு

விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் தடைபட்டு வரும் திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் விநாயகர் வழிபாடு விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விநாயக சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பாக உப்பூரில் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர், பக்தர்களுக்கு மயில் வாகன ரூபமாக காட்சி தருவார். ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் ஏகாதசி அன்று மட்டும் […]

Continue Reading

தோஷங்கள் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

முழு முதற்கடவுளான விநாயகருக்கு உகந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தோஷங்கள் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகர், முழு முதற்கடவுள். அவருக்கு உகந்த விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் தோன்றியதன் பின்னணி வரலாறு வருமாறு:- ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்த போது, அங்கு விநாயகர் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்தான். விநாயகர் குதித்துத் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவருடைய தொந்தியும் குலுங்கி கொண்டிருந்தது. அதைப் […]

Continue Reading