அருளை அள்ளித் தரும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்

கரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கண்ணுக்கு எட்டியவரை பச்சைப் பசேல் வயல் வெளிகள். நங்கவரம் ஊரின் உள்ளே நுழைந்ததுமே கிராமத்துக்கே உரிய மண்வாசனை. நம் மனதை மயக்கும் பெரிய கிராமம். சோழநாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனின் கடைக்கண் பார்வை இந்த ஊரின் மேல் பட்டது. விளைவு ? ஊரில் மூன்று ஆலயங்களை அமைத்தான் மாமன்னன். சைவப் பெருமக்களுக்காக சுந்தரேஸ்வரர் திருக்கோவில், வைணவப் […]

Continue Reading

புராண கதாபாத்திரப் படைப்புகள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக… கந்தர்வர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள் கந்தர்வர்கள். கந்தர்வ லோகத்தில் வசிக்கும் இவர்கள், தேவ பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல், மதிமயக்கும் சுவையான சோமபானம் தயாரிப்பதிலும் வல்லவர்கள். மேலும் மருத்துவத்திலும், காதலிலும் கை தேர்ந்தவர்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். […]

Continue Reading

ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகள்

இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்’ என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். […]

Continue Reading

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 7-ந்தேதி தொடங்குகிறது

108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு சிகர நிகழ்ச்சியாகும். வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்கார […]

Continue Reading

பலன் தரும் ஸ்லோகம் : (குடும்ப நிம்மதி பெருக…)

ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம் மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே! லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!! பொதுப் பொருள்: ஓ ஸ்வாமியே! உலகங்களை ரக்ஷிப்பவரே ஸம்சார ஸமுத்திரத்தில் மூழ்கிய என்னை ஓ கருணைக் கடலே இப்பொழுது கருணையினால் கரையேற்ற வேண்டும். எனது கடனைப் போக்குவதற்காக மிகுந்த ஐஸ்வரியத்தைக் கொடுக்க வேண்டும். ஓ வெங்கடேசா என்னைத் தாங்கள் கைகொடுத்துக் காக்க வேண்டும். (இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கவலைகள் நீங்கி, குடும்ப நிம்மதி பெருகும்.)

Continue Reading

நிதியை பெருக்குவார் ஆதிகேசவப் பெருமாள்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொன்னகரம். இது கடற்கரை கிராமம். இங்குதான் வெங்கடாசலபதி எழுந்தருளி உள்ளார். இவரை ஆதிகேசவப் பெருமாள் என்று அழைக்கிறார்கள். திருப்பதியில் வெங்கடாசலபதி காட்சி தருவதுபோல் இந்த ஆலயத்திலும் வெங்கடாசலபதி காட்சி தருவதால் இந்த ஆலயம் ‘‘தென் திருப்பதி’’ என்று அழைக்கப்படுகிறது. இவரை வணங்கினால் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கிய பலன் கிடைக்கும் என்பார்கள். திருப்பதியில் செலுத்த வேண்டிய காணிக்கையை இங்கு செலுத்தினால் அது திருப்பதி வெங்கடாசலபதிக்குப் போய் சேருகிறது […]

Continue Reading

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 8-ந் தேதி தொடங்கும் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். டிசம்பர் 17-ந் தேதி மோகினி லங்காரம், 18-ந் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. 24-ந் தேதி திருக்கைத்தல சேவை, 25-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி, 27-ந் […]

Continue Reading

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் நீங்காமல் உறைந்து நிற்கும், திருமகளின் அருளும் கிடைக்கும். இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம். ஏகாதசி விரதம்(ஸ்லோகம்) ஓம் கேசவாயநம, ஓம் நாராயணாயநம, ஓம் மாதவாயநம, ஓம் கோவிந்தாயநம, ஓம் விஷ்ணுவேநம,

Continue Reading

சனீஸ்வரனும்.. மகாவிஷ்ணுவும்..

மகாவிஷ்ணுவின் தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணனுக்கு மகாவிஷ்ணுவும், சனி பகவானும் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம். ஒரு சமயம் தன் அலுவல்களைக் கவனிக்கப் வேகமாக புறப்பட்ட சனிபகவானை, இடையில் வந்து தடுத்து நின்றார், விஷ்ணு பகவான். சனியின் பார்வை தெய்வத்திடம் பலிக்காது என்பதால் நேராக நின்ற பெருமாளிடம், “ஐயனே! என்னைத் தடுத்து நிறுத்தும் காரணம் என்ன?” என்று கேட்டார். “நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மகா விஷ்ணு. […]

Continue Reading

மகா விஷ்ணுவின் முதன்மை வாகனம் கருடன்

மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர். நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது. இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை […]

Continue Reading

மலையில் காட்சி தரும் திருமலைராய பெருமாள் கோயிலின் சிறப்பு

தமிழக – கேரள மலையோரம் மேற்கு தொடர்ச்சிமலையில் அழகுற அமைந்திருக்கும் திருமலைராயப் பெருமாள் கோயில் வரலாற்று பிரசித்தி பெற்றது. இங்குள்ள மூலவர் சுயம்புவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருந்த திண்டுக்கல் வட்டாரத்தில் 72 பாளைய பட்டுகளுள் இக்கோம்பையூரும் ஒன்றாக இருந்துள்ளது. அப்போது காஞ்சி அரியநாத முதலியார் அமைச்சராக இருந்தார். அப்போது மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னர், கோம்பை ஜமீன்தார் அப்பாஜி சித்தையகவுடர் ஆகியோரால் இக்கோயில் மற்றும் இங்குள்ள மிகப்பெரிய தேர், மற்றும் […]

Continue Reading

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்தாண்டுக்கான கைசிக ஏகாதசி விழா நேற்று தொடங்கி, இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா நேற்று தொடங்கி, இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு […]

Continue Reading

கைசிக ஏகாதசி விரத கதை

எப்படிப்பட்ட பாவத்தையும் கைசிக ஏகாதசி விரதம் தொலைக்கும் என்பது ஐதீகம். கைசிக ஏகாதசியின் பெருமையை விளக்கும் கதையை அறிந்து கொள்ளலாம். மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் என்னும் எளிய பக்தன். பெருமாளைப் பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன் நம்பாடுவான். வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள். இது நடந்த இடம் திருக்குருங்குடி என்ற திருத்தலம். அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. […]

Continue Reading

பெருமாள் கோயில்களின் தரிசனங்கள்

செங்கல்பட்டு, பழைய சீவரத்தில் வெங்கடேசர் சங்கு சக்கரத்துடன் திருமாலாகவும் ஜடாமுடியும் நெற்றிக்கண்ணும் கொண்டு ஈசனாகவும், கையிலும் திருவடிகளிலும் தாமரை மலர் கொண்டு நான்முகனாகவும் மும்மூர்த்திகளின் சங்கமமாக விளங்குகிறார். *சென்னை-வேலூர் வழியில் காவேரிப்பாக்கத்தில் சந்திரனின் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி, பெருமாளை நோக்கித் தவமிருந்து தன் கணவரின் சாபத்தைப் போக்கினாள். மூன்றாம் பிறையன்று திருவோண நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபாடு செய்ய, நினைத்தது நிறைவேறுகிறது. * ஹைதராபாத்-உஸ்மான் சாகர் ஏரிக்கரை, சிலுகூரிலுள்ள பெருமாள், வேண்டுவோருக்கு வெளிநாடு செல்ல விசா உடனே கிடைக்க […]

Continue Reading