மார்கழி மாதம் ஏகாதசி விரதம்

மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்ப டுகிறது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் […]

Continue Reading

சுழற்சி முறையில் வரும் ஏகாதசி

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் ‘திதி’ என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று என்று பொருள்படும். 15 நாட்களை கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் […]

Continue Reading

ஆழ்ந்த அமைதி தரும் கீதாச்சாரம்

யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் […]

Continue Reading

பெருமைகளை வழங்கும் திருமால் விரத வழிபாடு

சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். “காக்கும் கடவுள்” என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் உண்டு. அவை: விஷ்ணு, நாராயணன், கோவிந்தன், மதுசூதனன், ஜனார்த்தனன், பத்மநாபன், ப்ரஜாபதி, வராகன், சக்ரதாரி, வாமணன், மாதவன், நரசிம்மன், திரிவிக்ரமன், ரகுநாதன், ஜலசாயினன், ஸ்ரீதரன். பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை நாம் “பெருமாள்” என்று அழைக்கின்றோம். அவருக்காக கட்டிய கோவிலைப் “பெருமாள் கோவில்” என்று […]

Continue Reading

வைகுண்ட ஏகாதசியான இன்று படிக்க வேண்டிய ஸ்லோகம்

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும். ஓம் வாஜுஸூதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம் வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம் நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம் வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம் […]

Continue Reading

திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ஸ்ரீரங்க விமானம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விமானம் பிரம்மதேவனின் தவநலத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும். அதனை பிரம்ம தேவர் தேவலோகத்தில் நெடுங்காலம் பூஜித்து வந்தார். ஸ்ரீரெங்கநாதருக்கு நித்திய பூஜைகள் புரிந்து வரும்படி பிரம்மதேவர் சூரியனை நியமித்தார். பின்னர் ஸ்ரீராமபிரானின் முன்னோரான சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு என்ற அரசன் இவ்விமானத்தை தனது தலைநகராகிய அயோத்திக்கு வழிபட எடுத்துக்கொண்டு வந்தான். திருமாலின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமபிரான் இலங்கை வேந்தன் ராவணனை அழித்து பட்டாபிஷேகம் நடத்தப்பெற்ற கால கட்டத்தில் ராவணனின் சகோதரன் […]

Continue Reading

சகல சவுபாக்கியங்களை தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். சகல சவுபாக்கியங்களை தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருக்கும் முறை * ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும். * ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். * ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) […]

Continue Reading

வைகுண்ட ஏகாதசி: செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்

வைகுண்ட ஏகாதசியான இன்று சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அதேபோல் சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். ஏகாதசி அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். எத்தனை முறை சொல்கிறோமோ அந்த அளவு பலன் கிடைக்கும். மற்றும் […]

Continue Reading

திருவல்லிக்கேணி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந்தேதி முதல் திருவிழா பகல் பத்து வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து வேணு கோபாலன், காளிங்கர் நர்த்தன், சக்கரவர்த்தி திருமகள், திருக்கோலங்களில் விழா நடந்தது. இன்று ராப்பத்து திருவிழாவின் முதல் […]

Continue Reading

27-ந்தேதி வரை பரமபதவாசல் திறந்திருக்கும்

இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு கிடையாது. இன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்து இருக்கும். 24-ந்தேதி திருக்கைத்தல சேவையன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் திறந்திருக்கும். 27-ந்தேதி […]

Continue Reading

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு ஏன்?

ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கை யாழ்வாரின்பக்தியிலும், திருப்பணியிலும் மகிழ்ச்சியடைந்த ரெங்கநாதர் அவர் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு திருமங்கையாழ்வார், பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருவிழாவாக கொண்டாட வேண்டும். நம்மாழ் வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதனை ரெங்கநாதரும் ஏற்றுக்கொண்டு அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. மற்றொரு தகவலும் […]

Continue Reading

வற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம்

மகாவிஷ்ணுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்து சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார். மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அரிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. […]

Continue Reading

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும். மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் […]

Continue Reading

பலன் தரும் ஸ்லோகம் : (ஏழ்மை விலக, சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட…)

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் ஸ்ரீவேங்கடாசலதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம் ஸ்ரீரிநிகேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே. ஸ்ரீ ஸ்ரீநிவாச மங்கள ஸ்லோகம். பொதுப் பொருள்: திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீயப்பதியான ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே, நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா நமஸ்காரம். (வைகுண்ட ஏகாதசியன்று […]

Continue Reading