Shri Prasana Varadharaja Perumaal Vichur…

சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பாக எனது முன்னோர் N.வெங்கடாச்சாரி, வேங்கடகிரி சமஸ்தானத்தில்,திவான் பகதூர் ஆக வேலை பாரத்தபோது மன்னரால் இனாமாக (இலவசமாக)கொடுக்கப்பட்ட இடம்தான் விச்சூர் கிராமம்.
இந்த விச்சூர் கிராமத்தில் அப்பொழுது பிராமணர் வேத விற்பனர். அதிகமாக இந்த இடத்தில் இருத்தாலும். இங்கு பெருமாள் கோவில் கட்டவேண்டும் என்று தீர்மானித்து. இந்த இரட்டைபிராமணர் வீ தியில் நான்கு அம்சம் கொண்ட பெருமாளும் பெருந்தேவி தாயாரும் இந்த பிரமாண்டமான  கோயிலில் பிரதிஷ்டை செய்தார்கள். அதற்கு பிறகு சுமார் நான்கு தலைமுறையாக கோவில் சிறப்பாக நடைபெற்றது. பிறகு 100 ஆண்டுகளாக கோவில் பூட்டப்பட்டுள்ளது.  அக்காலத்தில் இக்கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் இருந்தது தற்சமயம் அது பாழடைந்து விட்டது. பிறகு 2012 இல் அம்பாள் உபவசகராக இருந்த நான் விஷ ஜந்துகள் மூலம் உயிருக்கு போராடிய நிலையில் பெருமாள் என்னை காப்பாற்றி என்னிடம் ஒரு உத்தரவாதம் வாங்கிக்கொண்டார்.

4
நான் திருப்பதி செல்ல முயற்சி செய்தபொழுது. என் கனவில் பெருமாள் பெருமான் தோன்றி நீ திருப்பதி வர வேண்டாம்,நானே விச்சூர் கிராமத்தில் சென்று சிதலம் அடைந்த கோயிலை சீர் செய்து உடனே கும்பாபிஷேகம் செய்! நான் விச்சூர் எவ்வளவு  பசியோடு காத்திருக்கிறேன். பத்து காண்டா மிருகம் கத்தினால் எவ்வளவு சத்தம் வருமோ அவ்வளவு சத்தம்!( அது போல் எனக்கு கர்ஜனை கேட்டது) மீண்டும். இவ்வளவு பசியாக உள்ள என்னை ஏன் தவிக்கவிட்டாய் என்று கேள்வி எழுப்பினார்??

6
பின் இரண்டு வாரம் தாமதம் ஆனது. மறுபடியும் ஏற்கனவே எனது கோவிலை பூட்டியதால் பாதி கிராமமே அழிந்து விட்ட நிலையில் மீதி உள்ள ஊரை காப்பாற்று என்று சொன்னார் அப்பொழுது நான் அந்த கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினேன். அதற்கு நீ பயப்பட வேண்டாம் நான் உனக்கு துணையாக இருப்பேன் இந்த ஊரும் உனக்கு துணையாக இருக்கும் என்று பெருமாள் சொன்ன சொல் போல் இந்த ஊர்  மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்
கோவிலை சுமார் 6 மாதம் புணரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன். என்னிடம் பெருமாள் வந்து இது வெறும் பெருமாள் கோவில் மட்டும் இல்லை இது பில்லி சூனியம், ஏவல், திருமண தடை, குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பேறு உடனே கிடைக்கும். இங்கு வருபவர்களுக்கு மூன்று எலுமிச்சம் பழம் (கன்னி)கொடுத்தால் அவர்களது பிரச்சனைக்கு உடனே தீர்வு கிடைக்கும் என்று பெருமான் கூறினார். ( இது ஒரு பரிகார ஸ்தலம்).
அமாவாசை, பௌர்ணமி அன்று இங்கு  தங்கும் அனைத்து பக்தர்களுக்கும், என்னையும்(பெருமாளையும்) தாயாரையும் அவர்கள் நினைக்க அவர்கள் காரியம் சித்தி ஏற்படும். பிரச்சனை உடனே தீர்ந்துவிடும் என்று பெருமான் கூறினார்.

7
இந்த அற்புத கோவிலை விரிவுபடுத்த பக்தர்கள் தங்களால் முடிந்த நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

  ஸ்ரீ ராம ஜயம்

 

Capture

 

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், விச்சூர் கிராமத்தில் பழமைவாயிந்த மிகவும் சிதிலமடைந்திருந்த ஸ்ரீ ப்ரசன்ன வரதராஜ பெருமாள் திருகோயில் ஸ்ரீ வேதந்த தேசிகர் தர்சன சபாவினரால் புனருத்தாரணம் செய்யபட்டு 03.09.2012 அன்று சம்ரோக்‌ஷனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத்திருக்கோயில் சுமார் 50 ஆண்டுகாலம் திரு ஆராதனைகள் எதுவும் நடைப்பெறாமல்   இருந்துவந்துள்ளது.

 

பெருமாள் மேற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

இத்திருக்கோயிலில்

பெருந்தேவித் தாயார் சன்னதி புதிதாக கட்டுவதற்கான வேலைகள் நடைப்பெற்றுவருகின்றன. இதற்க்கு சுமார் 6 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.பக்தர்கள் பொருளாகவே அல்லது நிதியாகவோ தாராளமாக உதவிடுமாறு மேற்படி சாபாவினர் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

 

 

 

 

தொடர்பு கொள்ள : ஸ்ரீ செளந்தராஜன்(9042173158 , 9790875492)

ஸ்ரீ சுரேஷ் கார்த்திக் 9840290121

 

 

 

ஸ்ரீ. எஸ். செளந்தராஜன் (9042173158 , 9790875492)

செயலளர்,

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தர்ஸன சபா,

சன்னதி தெரு, விச்சூர். 600 103.

 

இத்திருக்கோயில் மணலி புதுநகர் அருகில் உள்ளது.

இத்திருக்கோயில் அமைந்துள்ள் விச்சூருக்கு சென்னை வள்ளலார் நகரிலிருந்து      தண்டையார்பேட்டை வழியாகவும், செங்குன்றத்திலிருந்தும் நேரடியாக பேருந்து வசதி உள்ளது.

 

வங்கிக் கணக்கு விவரம்

Shri Vedanta Desikar Darsana Sabha,

              Indian Bank, Korattur Branch,

              Saving Bank Account No.6057527674

              IFSC Code: IDIB000K166

 
இங்கணம்
வேதாந்த தேசிகர் தர்ஸண சபா நிர்வாகி
செல் – 9790875492

மேலும்  இந்த  கோயிலை பெரிய கோயிலாக கட்ட விருப்பம் உள்ளவர்கள் இந்த Email -ஐ பார்த்து பக்தர்கள் பொருளாகவும் பணமாகவும் நேரில் வந்து பார்த்து தங்களால் முடிந்த உதவி செய்யவும் பக்தர்களின் பிரச்சனைகள் 100% தீர்ந்து விடும்.இப்பெருமாளும்,பெருந்தே
வி தாயாரும் அனைத்து மக்களின் குறைகளை தீர்த்து வருகிறார்கள்.நன்மைகள் பலவும் மக்கள் பெற்று வருகிறார்கள்.

R. Srinivasan gopal (9841082078)
ஸ்ரீ வேதாந்த தேசிகர் தர்ஷன சபா
(ஸ்ரீ பிரசன்ன வரதராஜ பெருமாள் சன்னதி தெரு )
விச்சூர் கிராமம்
சென்னை -103
பதிவு எண் : 874

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com