செப்டம்பரில் பிரம்மோற்சவ விழா துவங்கவுள்ளதால் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் உட்பட எட்டு வகையான வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா திருப்பதியில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது.
மேலும், செப்டமர் 11ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்கிற தூய்மைப் பணி, 12ம் தேதி அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்வுகளுக்கு பிறகு, செப்டம்பர் 13ம் தேதி மாலை 4.45 மணியளவில் திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில அரசு சார்பில் மூலவர் திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டுடை மற்றும் மங்கலப் பொருட்களை காணிக்கையாக அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேநாளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையானை வாகனத்தில் அமரவைத்து பெரிய சேஷ வாகன வீதி உலா நடைபெறுகிறது.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.