அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 25-ந் தேதி தொடங்குகிறது. அன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.50 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அப்போது பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உண்ணாமலை அம்மன் கோவில் முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்படும்.
விழாவை முன்னிட்டு 24-ந் தேதி (புதன்கிழமை) காலையும், மாலையும் விநாயகர் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 25-ந் தேதி முதல் வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ ஊர்வலம் நடக்கிறது.
தொடர்ந்து 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும், இரவில் பராசக்தி அம்மன் வீதி உலாவும் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீ மிதி விழாவும், பராசக்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.