அருள்மிகு ஆறுமுக விநாயகர் திருக்கோயில்

அருள்மிகு ஆறுமுக விநாயகர் திருக்கோயில்
[Image1]
 ஆறுமுகத்துடன் காட்சி தரும் விநாயகரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தபடி இருக்கிற ஆலயம் இது. ஆறுமுக விநாயகரை வணங்கினால், சகல ஞானங்களையும் யோகங்களையும் பெறலாம்.
மூலவர் : ஆறுமுக விநாயகர்
உற்சவர் :
அம்மன்/தாயார் :
தல விருட்சம் :
தீர்த்தம் :
ஆகமம்/பூஜை :
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :
ஊர் : சண்முகா நதிக்கரை
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
 திருவிழா:
தைப்பூசம், ஆடி அமாவாசை, ஆடிப்பதினெட்டு, விநாயகர் சதுர்த்தி
 தல சிறப்பு:
இங்குள்ள விநாயகர் ஆறுமுகங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆறுமுக விநாயகர் திருக்கோயில் சண்முகா நதிக்கரை, திண்டுக்கல்.
 பொது தகவல்:
மூலவர் ஆறுமுக விநாயகர், தவிர சுந்தர விநாயகரும், ஆண்டித் திருக்கோலத்தில் முருகப்பெருமானும், காசிவிஸ்வநாதர் மற்றும் காளியம்மனும் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்குச் சற்றுத் தள்ளி, தோகையடி விநாயகர் கோயில் உள்ளது. இங்கே புலிப்பாணி சித்தரும் போகரும் காட்சி தருகின்றனர்.
பிரார்த்தனை
சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
 தலபெருமை:
சிறிய ஆலயம்தான் என்றாலும் ஆறுமுகத்துடன் காட்சி தரும் விநாயகரைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தபடி இருக்கிற ஆலயம் இது. ஆறுமுக விநாயகரை வணங்கினால், சகல ஞானங்களையும் யோகங்களையும் பெறலாம். சண்முகா நதியில் நீராடிவிட்டு, சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்குவது கூடுதல் சிறப்பையும் பலனையும் தரும். ஊற வைத்த பச்சரிசியுடன் வெல்லம், மிளகு, ஜீரகம் மற்றும் நல்லெண்ணெய் கலந்து படைத்தால், வியாபாரம் விருத்தியாகும். கல்வியில் மேன்மை பெறலாம்.
  தல வரலாறு:
சூரனை வீழ்த்திவிட்டு, அந்த உக்கிரம் தணியாமல் கடும் கோபத்துடன் இருந்தாராம் முருகக் கடவுள், தம்பியின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, முருகப்பெருமானைப் போலவே ஆறுமுகங்களைக் காட்டியபடி எதிரே நின்றாராம் விநாயகர். அதைக் கண்டு சிரித்ததில் கந்தனின் கடும் கோபம் முழுவதும் காணாமல் போனது என்றொரு கதை உண்டு. எனவே இங்கு ஆறுமுக விநாயகராக அருட்காட்சி தருகிறார்.

[Gal1] download
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விநாயகர் ஆறுமுகங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com