அழிவிடைதாங்கி பைரவர் கோவிலில் 30-ம்தேதி கால பைரவாஷ்டமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள அழிவிடைதாங்கியில் சொர்ணகால பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 500 வருடங்கள் பழமையானது இந்த திருக்கோயில்.

இத்திருக்கோயில் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதந்து, சுனவாகனம் கிழக்கு நோக்கி தனிக்கோயிலாக அருள்பாலிக்கிறார், பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். காசியிலிருக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு நிகரான ஷேத்திரம், தமிழ்நாட்டில் பல பைரவர் கோயில்கள் இருந்தாலும் ஸ்ரீசொர்ணகால பைரவர் போன்ற தனி ஆலயம் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த ஆலயத்தில் வரும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. சிறப்பு யாகமும் நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் திரளாக பங்கேற்று பைரவரின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன்

வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

பரிகாரங்களும்…. தீர்வும்….

வறுமை நீங்க :

வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்ய அஷ்ட தரித்திரம் விலகும்.

பிள்ளைப்பேறு உண்டாக :

தேய்பிரை அஷ்டமியில் விரதம் இருந்து,செவ்வரளிப் பூவாள் 11 அஷ்டமிகளில் அர்ச்சித்தால் கைமேல் பலன்.

வழக்குகளில் வெற்றி பெற, வியாபார லாபம் அடைய :

பைரவருக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்து வடை, சர்க்கரைப் பொங்கல், தேன் முதலியன படைக்கவேண்டும்.

இழந்த பொருட்களை திரும்ப பெற :

7 மிளகுகளை துணியில் மூட்டை கட்டி, நல்லெண்ணைய் தீபம் ஏற்ற இழந்தவற்றை திரும்ப பெறலாம்.

திருமண தடை நீங்க :

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன்.

நவக்கிரக தோஷம் விலக :

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய மிக விரைவில் பலன். ஸ்ரீ பைரவரை தொடர்ந்து இடைவிடாமல் வழிபடுவோருக்கு சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தன்னால் கிடைக்கும்.

அமைவிடம் :

திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா அழிவிடைதாங்கி கிராமம் மதுரா பைரவபுரம்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

வழித்தடம்:

காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.

தொகுப்பு :

ஸ்ரீராஜசேகர்.பு
தொடர்புக்கு – 8248815001

4/43, இரன்டாவது மெயின் தெரு
அண்ணா நகர், செய்யார் – 604407
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாடு.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com