ஆடி அமாவாசை: சதுரகிரி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய திருவிழாவாக வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
Related image
இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் கடந்த 27-ந் தேதி முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற 1-ந் தேதி வரை கோவிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related image

பக்தர்களுக்கு போதுமான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை எனவும், கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்ததாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

ஆடி அமாவாசை திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com