ஆடிவெள்ளியன்று காலையில் காபி, டீ கூட சாப்பிடாமல் அம்பாள் பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை முதலில் சாப்பிட வேண்டும். தவிடு நார்சத்துடையது. இதில் வைட்டமின் “பி’ உள்ளது. வெல்லத்தில் இரும்புச் சத்து உண்டு. ஆடி மாதத்தில் இந்த சத்து உடலுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த உணவை நைவேத்யம் செய்து, அம்பாளின் அருள் கடாட்சமும் பெற்று சாப்பிடலாம்.
ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தது. ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. கிழமைகளில் ‘சுக்ர வாரம்‘ என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமைதான். ஆடி வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும். அன்றைய தினம் அம்மனுக்கு விரதமிருந்து அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபட ஏற்ற நாளாகும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.