இந்த வாரம் என்ன விசேஷம்?

ஏப்ரல் 1, திங்கள்  

ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி.

ஏப்ரல் 2, செவ்வாய்  

பிரதோஷம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. தண்டியடிகள் நாயனார் குரு பூஜை. மேலஉளூர் பரிதியப்பர் கோயிலில் சூரிய பூஜை.

ஏப்ரல் 3, புதன்  

மாத சிவராத்திரி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதியுலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி தங்க சூரியப் பிரபையில் வேணுகோபால திருக்கோலமாய்க் காட்சி. உடையாளூர் உற்சவம்.

ஏப்ரல் 4, வியாழன்  

அமாவாசை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதியுலா. ஏரல் ஸ்ரீஅருணாசல சுவாமிகள் திருவிழா.

ஏப்ரல் 5, வெள்ளி  

தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை. திருநெல்வேலி ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com