இந்த வாரம் என்ன விசேஷம்

ஜூலை 22, திங்கள்  –  சஷ்டி. ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. க்ருஷ்ணபக்ஷ சஷ்டி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மன்மதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 23, செவ்வாய் – சப்தமி. நந்தம் ஸ்ரீமாரியம்மன் பூந்தேரில் பவனி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சஷ்டி விரதம். திருவாரூர் ஸ்ரீகமலை ஞானப்பிரகாசர் மாதாந்திர வழிபாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சத்யா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 24, புதன் – அஷ்டமி.  ஸ்ரீரங்கம்
ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல். தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் வந்தனீயா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 25, வியாழன் – நவமி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்குளம் வலம் வருதல். வேளூர், சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு , திருச்சிமலைக்கோட்டை, மதுரை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் ஆகிய சிவஸ்தலங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு ஆடிப்பூர உற்சவ ஆரம்பம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் நிதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூலை 26, வெள்ளி – தசமி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் பரணி உற்ஸவம். படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு கண்டருளல். ஆடிக்ருத்திகை திருத்தணி தெப்பம், பழநி ஆடிக்கிருத்திகை. தருமை ஸ்ரீஷண்முகர் அபிஷேகம், சென்னை குரோம்பேட்டை குமரன்குன்றம் ஆடிக்கிருத்திகை, கிரிவலம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் காயத்ரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com