இந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை

18-ந்தேதி (செவ்வாய்) :

* திருநெல்வேலி நெல்லையப்பா் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.

* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்திலும், தாயார் தண்டியலிலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

19-ந்தேதி (புதன்) :

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ரத உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராடல், ஊஞ்சல் சேவை.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் மற்றும் தாயார் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல், இரவு தோளுக்கினியானில் சயன திருக்கோல காட்சி.
* கீழ்நோக்கு நாள்.

20-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருநெல்வேலி டவுண் ராஜராஜேஸ்வரி கோவில் வருசாபிஷேகம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.

21-ந்தேதி (வெள்ளி) :

* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஜேஷ்ட அபிஷேகம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி கோவிலில் தீர்த்தவாரி.
* மேல்நோக்கு நாள்.

22-ந்தேதி (சனி) :

* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவரணம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* மேல்நோக்கு நாள்.

23-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (திங்கள்) :

* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com