இந்த வார விசேஷங்கள் 2.7.2019 முதல் 8.7.2019 வரை

திருவள்ளூர் வீரராகவ பெருமாள்
2-ந்தேதி (செவ்வாய்) :

அமாவாசை.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், கண்டனூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
சமநோக்கு நாள்.

3-ந்தேதி (புதன்) :

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி ஆலயத்தில் உற்சவம் தொடக்கம், தோளுக் கினியாளில் சுவாமி பவனி வருதல்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் திருவீதி உலா.
பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம்.
சிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.
மேல்நோக்கு நாள்.

4-ந்தேதி (வியாழன்) :

முகூர்த்த நாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலியில் திருவீதி உலா.
திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (வெள்ளி) :

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி, அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தான் ஆகிய தலங்களில் சிவ பெருமான் உற்சவம் தொடக்கம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆடும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.
சிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (சனி) :

சதுர்த்தி விரதம்.
திருநெல்வேலி நெல்லையப்பர், மதுரை, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
சிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி தருதல்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் அம்ச வாகனத்திலும், பெரிய பெருமாள் கருட வாகனத்திலும் பவனி.
தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.

7-ந்தேதி (ஞாயிறு) :

திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்மன் வெள்ளி ரதத்திலும் பவனி.
மதுரை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை.
ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு.
திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.

8-ந்தேதி (திங்கள்) :

முகூர்த்த நாள்.
சஷ்டி விரதம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம்.
சிதம்பரம் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன உற்சவம்.
ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கல்யாண வைபவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் தண்டியலில் பவனி.
திருஉத்திரகோசமங்கை சிவபெருமான் சிறப்பு அலங்கார தரிசனம்.
மேல்நோக்கு நாள்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com