இன்றய கோபுரங்கள் தரிசனம்:

அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ (மூவேந்தர் சதுர்வேதி மங்கலம், பள்ளி கொண்ட பெருமாள்) கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயில், கோட்டை ( ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் அருகில்), ஈரோடு.
( கொங்கு நாட்டில், சோழர்களால் கட்டப்பட்ட முதல் வைணவ திருக்கோயில் என்ற சரித்திரப் பெருமை கொண்ட சுமார் 1100-வருடங்களுக்கு மேல், பழமையான ஆலயமாகும்.  கருவறையில்,  கஸ்தூரி ரங்கநாதர்  ஸ்ரீதேவி, பூதேவியருடன் (பிரமாண்டமாக) பள்ளி கொண்ட பெருமாளாக அருட்காட்சி அளிக்கிறார். தலைக்கு மேலே, ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடையாக இருக்கிறார். சுவாமிக்கு தைல காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. கமலவல்லி தாயார் தனி சன்னதியில் அழகுற அருட்காட்சி அளிக்கிறார்.
பங்குனி உத்திரத்தன்று நடக்கும் திருக்கல்யாணம் (அன்று ஒரு நாள் மட்டும் இருவரையும் ஒரு சேர தரிசிக்கலாம்.) மிகவும் விசேஷம். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்திற்காக சுவாமிக்கு ‘கஸ்தூரி’ எனும் மருந்து படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது.(இப்போது அந்த வழக்கம் நின்றுவிட்டது.) இதன் காரணமாகவே சுவாமிக்கு ‘கஸ்தூரி ரங்கநாதர்’ என்ற பெயர் உண்டாயிற்றாம். இங்கு வீற்றிருக்கும் ‘லிங்கப்பாறை’ ஆஞ்சநேயர் மிகவும் (சக்தி வாய்ந்த) பிரசித்தி பெற்றவராவார். திருமணத்தடை, புத்திர பாக்கியம், சுகப்பிரசவம் அனைத்தும் சுபம் பெற இந்த கஸ்தூரி அரங்கநாதரையும் கமலவல்லி தாயாரையும் வழிபாடு செய்வது சிறப்பு.
🙏🏻 ஓம் நமோ நாராயணாய நமக:
Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com