இன்று இந்த செவ்வாய் காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

ஒரு மனிதன் எந்த வேலையே செய்வதாயினும் அதற்கு உடம்பில் தெம்பு வேண்டும். உடலில் உள்ள உஷ்ணம் மூலமாக நமக்கு தெம்பு கிடைக்கிறது. இந்த உஷ்ணத்திற்குரியவர் செவ்வாய் பகவான்.

உடலில் உள்ள உஷ்ணமானது குறைவானாலும் அதிகப்படியான பிரச்சனை வரும், அதே சமயம் அதிகரித்தாலும் அதிகப்படியான பிரச்சனை வரும்.நமது உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை சரியாக கொடுத்து நம்மை வழிநடத்துபவர் செவ்வாய். பூமாதேவியின் மகனாக கருதப்படும் செவ்வாய், பூமிகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.

செவ்வாய் பகவானை வழிபடும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்தால் பல நல்ல பலன்களை பெறலாம். அதோடு செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அந்த தோஷத்தின் தாக்கம் குறையும்.

செவ்வாய் காயத்ரி மந்திரம்:

ஓம் வீரத்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்

Image result for vaitheeswaran koil

பொருள்: வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானே, வாழ்வில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறியும் வல்லமை கொண்டவரே இந்த அடியேனுக்கு நல்லாசி வழங்க வேண்டி உங்களை வணங்குகிறேன். தினமும் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பயனாக உடல் பிணி நீங்கும், உடல் உறுதிபெறும், மனதில் தைரியம் பிறக்கும், உள்ளம் தூய்மை அடையும், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜபிக்கலாம்.

செவ்வாய் பகவான் பரிகாரங்கள்:

Image result for nagapattinam vaitheeswaran templeசெவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சென்று, சிவபெருமான், பார்வதிக்கு அபிஷேக அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது சிறப்பு. மேற்கூறிய பரிகாரத்தை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டுற்க்கு அருகிலேயே இருக்கும் சிவன் கோயிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு செவ்வாய் கிழமைகளில் காலை 9 லிருந்து 10 மணிக்குள்ளாக சென்று, செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சாற்றி, சிறிது துவரம் பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறை 1008 வரை துதிக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனை பெற முடியும். இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் இருக்கும், பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, முருக மந்திரங்களை 108 எண்ணிக்கை வரை துதிப்பதால் செவ்வாய் பகவானின் அருள் கிட்டும். உங்களின் இடது கையில் தரமான செம்பு வளையம் ஒன்றை செவ்வாய்க்கிழமையில் அணிந்து கொள்ள வேண்டும்.

கோயில்களில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெறும் காலத்தில் கோயில் பூஜைகளுக்கு செந்நிற மலர்கள் மற்றும் துவரம் பருப்புகளை தானமாக தரலாம். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் போன்றோர்களின் நலன்களுக்கான விடயங்களுக்கு உங்கள் சக்திக்கேற்ப நிதி அளிப்பது செவ்வாய் பகவானின் நல்லருளை உங்களுக்கு பெற்றுத்தரும் சிறந்த பரிகாரமாக காரணமாக இருக்கிறது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com