இன்று இந்த புதன் காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

நவகிரகங்களில் புத்திக்கும் வித்தைக்கும் அதிபதியாக திகழ்பவர் புதன் பகவான். ஒருவரது ஜாதகத்தில் புதன் சிறப்பாக இருந்தால் அவர்கள் தன் புத்தி கூர்மையால் தான் செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை அடைவார். அதே சமயம் புதன் பகவான் ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் தொழிலில் வெற்றிகாண்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கும். ஆனால் கவலை தேவை இல்லை புதன் பகவானை வணங்கி அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜபித்து வர அவர் நன்மைகளை வாரி வழங்குவார்.

Related image

புதன் காயத்ரி மந்திரம்

ஓம் கஜத்வஜாய வித்மஹே

சுகஹஸ்தாய தீமஹி

தந்நோ புத ப்ரசோதயாத். 

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பது நல்லது. தினமும் ஜபிக்க முடியாதவர்கள் புதன் கிழமைகளில் ஜபிக்கலாம். இதை ஜபித்தால் செய்யும் தொழில் தழைத்தோங்கும். அறிவும் ஆற்றலும் பெருகும். நாக்கு மற்றும் மூளை சம்மந்தமான நோய்கள் அகலும். புதன் கிழமைகளில் புத பகவானுக்கு வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை கூறுவது மேலும் சிறப்பு சேர்க்கும். புதன் பகவான் பரிகாரங்கள்: புதன் பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு ஏதேனும் ஒரு புதன் கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

பிறகு அங்கிருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது புதன் பகவானின் அருளைப் பெற்றுத்தரும். மேற்கூறிய பரிகார பூஜை செய்ய இயலாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் புதன் கிழமைகள் தோறும் காலை 8 மணிக்குள்ளாக சென்று புதன் பகவானுக்கு சிறிது பச்சை பயிறு பருப்புகளை சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, புதன் பகவானின் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே புதன் பகவானின் முழுமையான அருளைப் பெற முடியும்.

இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிதளவை கிழித்து, அதில் சிறிது வெந்தயத்தை போட்டு முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிப்பை உங்கள் பூஜை அறையில் வைத்து விட வேண்டும். தினமும் காலையில் எழுந்து இந்த வெள்ளை முடிப்பை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, புதன் பகவானுக்கு உரிய மந்திரங்களை துதித்து வழிபடுவதால், வாழ்வில் செல்வ வளம் பெருகச் செய்யும். நாராயணனாகிய பெருமாள் புதன் பகவானின் அம்சம் கொண்டவராவார். புதன் கிழமைகளில் வீட்டிலேயே பெருமாள் படத்துக்கு தீபமேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் போற்றி போன்ற மந்திரங்களை துதித்து வந்தாலும் புதன் கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மைகள் உண்டாகும். உங்களால் முடிந்த போது பெருமாள் கோயில்களில் தாயாருக்கு பச்சை நிற புடவையை வஸ்திர தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com