உங்களுக்கு கண் திருஷ்டிகள் நீங்க, செல்வம் பெருக மந்திரம்

மனிதர்களுடைய வாழ்க்கை என்பது எப்போதும் இன்பங்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. நம் அனைவரின் வாழ்விலும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கின்றன. அதிலும் கஷ்ட காலங்களில் நமக்கு மனரீதியான சோர்வு ஏற்படுவதோடு, எதிர்காலத்தை குறித்த பயங்களும் ஏற்படுகின்றன. அத்தகைய சமயங்களில் நமக்கு மனோ பலமாக இருப்பது தெய்வ நம்பிக்கை மட்டும் தான். இந்திய பாரம்பரியத்தில் முழுமுதற் நாயகனாகவும் அனைத்து தடைகளை உடைக்கும் தெய்வமாகும் விநாயகப் பெருமான் இருக்கிறார். அந்த விநாயகப் பெருமானுக்குரிய இந்த பீஜ மந்திரத்தை துதிப்பதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விநாயகர் பீஜ மந்திரம்

ஆவ்ம் ஸுமுகாய நமஹ –

மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் பீஜ மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். வறுமை நீங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். உடல், மனம், ஆன்மா தெய்வீக சக்தி பெறும். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும். விநாயகர் வழிபாட்டிற்குரிய தினங்கள் பொதுவாக விநாயகர் பெருமான் வழிபாட்டை அனைத்து நாட்களிலும் கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு உங்களின் அன்றாட பணிகளை தொடங்குவதற்கு முன்பு விநாயகப் பெருமானுக்குரிய மந்திரங்கள் துதித்து தொடங்குவதால் அவை சிறப்பான பலன்களை தருவதாக அமையும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது விநாயகப் பெருமானின் முழுமையான அருள் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. விநாயகர் வழிபாடு பலன்கள் முழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானுக்குரிய மந்திரித்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும். உடல் மற்றும் மன பலமும் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மேம்படும். கல்விக் கலைகளில் சிறக்க முடியும். தீய எண்ணங்கள், குணங்கள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் வெற்றியும் அதிக லாபமும் கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். மற்ற தெய்வங்களின் அருள் கடாட்சம் கிடைக்க வழிவகை செய்யும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com