ஒரு ஆணும், பெண்ணும் தனித்து வாழ்ந்து அறம் செய்வதை நமது முன்னோர்கள் போற்றவில்லை. மாறாக திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் இருந்த படி அனைவருக்கும் அறம் செய்வதே சிறப்பு என கூறுகின்றனர். தற்காலங்களில் பல ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஆகிறது. இப்படிப்பட்டவர்கள் விரைவில் இல்வாழ்க்கையில் ஈடுபட துதிக்க வேண்டிய காத்யாயினி மந்திரம் .
காத்யாயினி மந்திரம்
ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா
த்வம் ஷங்கர் பிரியா ததா மாம்
குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்
பராசக்தியின் ஒரு அம்சமான
ஸ்ரீ காத்யாயனி தேவிக்குரிய மந்திரம்.
இம்மந்திரத்தை தினமும் காலை 27 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் வீட்டில் இருக்கும் அம்பாள் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை 1008 வரை உரு ஜெபிப்பதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமையப் பெறுவார்கள். திருமணம் என்பது ஒரு தெய்வீக உறவு என கூறுகின்றனர். எனவே தான் நமது மதத்தில் இருக்கின்ற பல தெய்வங்கள் திருமணம் செய்து இல்லற வாசிகளாக இருக்கின்றனர். சரியான வயது மட்டும் மன பக்குவமடைந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு சிலருக்கு சரியான காலத்தில் திருமணம் நடைபெறாமல் தாமதமாகிறது. அவர்கள் இம்மந்திரத்தை துதித்து காத்யாயனி தேவியை வழிபடுவதால் விரைவில் இல்லற வாழ்க்கை ஏற்படும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.