எதிரிகளை அழிக்க உதவும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்

ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த மந்திரத்தை துதிப்பதன் பயனாக நம் கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் யாவரும் நமக்கெதிராக செய்யும் செயல்கள் யாவும் தூள் தூளாக போகும்.

ஹரிஓம் பஹவதி
ஆதிபகவதி அனாதரட்சகி, அகிலத்தையாண்ட
ப்ரமாண்ட நாயகியே,
ஆனந்த தாண்டவி
ரேணுகா பரமேஸ்வரி தாயே, ஆதிமுதல்வியே
ஹரியையும் அயனையும் படைத்த அமுதவல்லித்தாயே,
அண்டசராசரம் யாவும் துதிக்கும்
ரேணுகா பரமேஸ்வரித்தாயே,

பண்ணிருகரனையும் பாசாங்குசதாசனையும், ஈன்ற
ரேணுகா பரமேஸ்வரித்தாயே,
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ரிவ்வும் மவ்வும்,
ஓங்காரி றீங்காரி, வாவா வாவா,
வந்தருள் புரிகுவாய் ஸ்வாஹ.

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஆரமித்து பின் ஒரு மண்டல காலம் வரை இதை தினமும் ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com