ஆன்மிக வாழ்க்கை அற்புதமானது. ஆண்டுக்கு ஒரு முறை மாலை அணிந்து, விரதம் இருந்து சபரி மலைக்கு பயணிக்கிற, இந்த காலங்கள் ஒவ்வொரு பக்தரின் வாழ்விலும் அற்புத அனுபவத்தை அள்ளித் தருகிறது. ஐயப்பனின் வாழ்க்கை ஓர் ஆன்மிக அழகியல் கொண்டிருக்கிறது. பொதுவாக மனித வாழ்க்கையை 5 பருவங்களாக நமது சாஸ்திரங்கள் பிரித்து சொல்கின்றன. இந்த ஐம்பெரும் பருவங்களை விளக்கும் வகையிலேயே ஐயப்பனின் அவதாரங்களும் அமைந்திருக்கின்றன. ஐயப்ப சுவாமியின் வாழ்வும் ஐந்து பருவங்களை கொண்டிருக்கிறது. அதாவது பிறந்தது முதல் 18 வயது வரையிலும் பால் பருவம் என்பார்கள். இந்த பால் பருவத்தை விளக்கும் அவதாரமாக, திருத்தலம் குளத்துப்புழா விளங்குகிறது. மேலும், 19 வயது முதல் 35வயது வரை உள்ள பருவத்தை யவ்வன பருவம் (இளமைப்பருவம்) என்பர்.
இவ்வகையில் இந்த பருவத்தை விளக்கும் தலமாக ஆரியங்காவு இருக்கிறது. மேலும், 36 வயது முதல் 55 வயது வரையிலான பருவத்தை கிரஹஸ்த பருவம் என்பர். இதனை விளக்கும் விதத்திலேயே அச்சங்கோவில் இருக்கிறது. மேலும், 85 வயது வரையான பருவம் வானப்பிரஸ்தம் என்படுகிறது. இப்பருவத்திற்கான தலமாக சபரிமலையும், 86 வயது முதல் ஏகாந்த நிலை எனப்படும், இறைவனோடு ஐக்கியப்படுகிற நிலைக்குரிய தலமாக காந்தமலையும் இருக்கின்றன. இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளை விளக்கும் தனது அவதாரங்களோடு, சுவாமி ஐயப்பன் கோயில்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.