கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும். அந்த எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.
கணபதி ஸ்லோகம்
“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா”
என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.
“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”
என எல்லா கடன்களுக்கும் ருண ஹரண கணபதியை வணங்கிட வேண்டும்.
சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.
மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.
அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடன் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.