காரிய தடை நீக்காரிய தடை நீக்கும் கணபதி ஹோமம்

கணபதி ஹோமத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் செய்வது இன்னும் கூடுதல் பலன்களைத்தரும். தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட்டால் ராஜ வசியம், அரசு பதவிகளைப் பெறலாம்.

 திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெற்று வளமோடு வாழ நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

எடுத்துக் கொண்ட மந்திரம் சித்தி பெற வேண்டுமானால் நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தால் தொட்டதெல்லாம் ஜெயம் தான். பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும். நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

கடன் தொல்லையாலும், வறுமையாலும் வாடுபவர்கள் கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் அவற்றிலிருந்து விடுபடலாம். கணபதி ஹோமத்தை பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.

உங்களால் கணபதி ஹோமம் நடத்த முடியாவிட்டால் கணபதி ஹோமம் நடைபெறுகிற இடங்களுக்குச் சென்று ஹோமத்துக்குத் தேவையான முழுத்தேங்காய், பழவகைகள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், மலர் வகைகள், தாமரை மலர், சிவப்பு வஸ்திரம் போன்றவற்றை அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வழங்கலாம். இது கணபதியின் கடைக்கண் பார்வைபட வழிவகுக்கும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com