குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)

இறைவர் திருப்பெயர்: நாகேஸ்வரர், நாகநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம்.
வழிபட்டோர்: அப்பர், சிங்கமுக தீர்த்தம்.

தல வரலாறு

      • அமுதகலசத்தின் (குடத்தின்) வில்வம் சிவலிங்கமான தலம்.

 

தேவாரப் பாடல்கள்		: அப்பர் - சொன்மலிந்த மறைநான்கா.

 

 

சிறப்புகள்

      • “கோயிற் பெருத்தது கும்பகோணம்” என்னும் மொழிக்கேற்ப இத்தலத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன.

         

      • தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன.

      • இங்குள்ள நடராச மண்டபம், “பேரம்பலம்” எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது; இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்¢ச்) சக்கரம் கண்டு மகிழத் தக்கது, இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது; பெயரே ஆனந்தத் தாண்டவ நடராசசபை அல்லவா? நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன.

         

      • மூலவர் – அழகான திருமேனி; உயரமான ஆவுடையார் – மிகவும் குட்டையான பாணம்.

         

      • ‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்’ என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராசசபை, சுற்றுச்சுவர்கள், சங்கமுகதீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டிய அருஞ்செயலை இன்று கேட்டாலும், நினைத்தாலும் நம் மனம் நெகிழ்கின்றது.

      • சித்திரை மாதம் 3வது  நாள் சூரிய கிரணங்கள் காலையில் மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தியின் மேல் படுகின்றன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு – குடந்தைக் கீழ்க்கோட்டம், கும்பகோணம் – 612 001 தஞ்சாவூர் மாவட்டம். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கும்பகோணத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com